இலங்கை நிர்வாக சேவை, இலங்கை கணக்காளர் சேவை, முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர் சேவை, ஆசிரியர் சேவை போன்ற பதவிகளுக்கான வேலைவாய்ப்புக்கள் உட்பட அனைத்து போட்டிப்பரீட்சைகள் தொடர்பாகவும் நடாத்தப்படும் பொதுவிவேகம் General Intelligence வினாத்தாள்களில் இடம்பெற்ற வினாக்கள் போன்ற மாதிரி வினாக்கள் அனைவரும் நேரடியாக கற்றுக்கொள்ளும் வகையில் தொடராக பதிவேற்றப்படுகின்றன.
பொதுவிவேகம் General Intelligence Paper (Series 2)
01 தொடக்கம் 05 வரையுள்ள ஒவ்வொரு வினாவுக்கும் சரியான விடையைத் தெரிவு செய்து அதற்குரிய தெரிவின் இலக்கத்தை வினாவின் எதிரேயுள்ள புள்ளிக்கோட்டில் எழுதுக.
01. நபரொருவரின் ஒரேயொரு அக்கா விமலா ஆவார். ஒரேயொரு தங்கை சீதா. ஒரேயொரு தம்பி ரங்கா. அண்ணன் ராகவன். இந்நாலவரதும் தங்கையான சீதா எப்போதும் பொய் சொல்லுபவர் ஆவார். அவர் தனக்கு 3 சகோதரர்களும் ஒரு சகோதரியும் உள்ளதாக கூறினார். இத்தகவல்களின் படி பின்வரும் கூற்றுக்களுள் சரியானது.
(1) சீதாவிற்கு ஒரு சகோதரி உள்ளார்.
(2) ரங்காவிற்கு இரண்டு மூத்த சகோதரர்கள் இருக்கின்றார்கள்
(3) விமலாவிற்கு இரண்டு தங்கைகள் இருக்கின்றார்கள்
(4) ராகவன் சம எண்ணிக்கையான சகோதரர்களையும் சகோதரிகளையும் கொண்டுள்ளார். (………..)
02. ஒரு குறித்த ஆவணமொன்றில் ரூ 10 பெறுமதியான முத்திரை ஒட்டப்பட வேண்டியுள்ளது. இதற்காக ரூபா 1, 2, 5, 10 பெறுமதியுடைய முத்திரைகளை மட்டும் உபயோகித்து எத்தனை வழிமுறைகளில் முத்திரைகளை தெரிவு செய்யலாம்?
(1) 8 (2) 9 (3) 10 (4) 11 (…………..)
03. A,B எனும் இரண்டு கடிகாரங்கள் ஒரே சீரான வேகத்தில் இயங்கினாலும் தவறான நேரத்தையே காட்டின. ஒரு நிலையில் இரு கடிகாரங்களும் மணி 12.00 இல் நிலைப்படுத்தப்பட்டு ஒரே நேரத்தில் இயங்க விடப்பட்டது. கடிகாரம் A ஆனது மணி 1.00 ஐக் காட்டும்போது கடிகாரம் B ஆனது முதல் முறையில் மணி 1.15 ஐக் காட்டியது. எனின் கடிகாரம் B ஆனது முதல் முறையாக மணி 2.00 ஐக் காட்டும் போது கடிகாரம் A ஆனது காட்டும் நேரம் யாது?
(1) 1.36 (2) 1.48 (3) 2.12 (4) 2.24 (…………..)
04. சந்திரா தன்னிடம் உள்ள 500 ரூபா நோட்டுக்களை ஒரு கடித உறையினுள் ஒரு நோட்டு வீதம் இடும் போது ஒரு கடித உறை போதாமல் இருந்தது. பின்னர் ஒரு கடித உறையினுள் இரண்டு 500 ரூபா நோட்டுக்கள் வீதம் இடும்போது ஒரு கடித உறை எஞ்சியது. ஆரம்பத்தில் சந்திராவிடம் 500 ரூபா நோட்டுக்களாக இருந்த மொத்தப் பணத்தையும் கடித உறையின் எண்ணிக்கையையும் முறையே குறிப்பிடும் விடை எது?
(1) 3, 4 (2) 4, 3 (3) 3, 2000 (4) 2000, 3 (…………..)
05. குறித்த ஒரு பொருளை 10% கழிவுடன் கொள்வனவு செய்யும் போது, அதன் நான்கு மடங்கு கழிவு வழங்கப்பட்டது. குறித்த அப்பொருளின் விலையை விட இரண்டு மடங்கு விலையான வேறொரு பொருளை கொள்வனவு செய்யும் போது அவ் இரண்டாவது பொருளுக்கு பெறப்படும் கழிவின் சதவீதம் என்ன?
(1) 5% (2) 10% (3) 20% (4) 40% (…………..)
06 தொடக்கம் 10 வரையான வினாக்கள் கீழேயுள்ள தகவல்களை அடிப்படையாக கொண்டவை.
A தொடக்கம் G வரை எழுத்துக்களால் குறிப்பிடப்படும் ஏழு தொழிலாளர்களுள் எழுத்து B, D, F, ஆகிய எழுத்துக்களால் குறிப்பிடுபவர்களைத் தவிர அனைவரும் ஆண்கள் ஆவர்.
ஐந்து நாட்களும் அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட வேலை ஒழுங்கு விபரம் கீழே தரப்பட்டுள்ளது.
வேலையானது திங்கள் ஆரம்பித்து வெள்ளி முடிவடையும்,இதற்கேற்ப பின்வரும் ஒவ்வொரு வினாவிற்குமுரிய சரியான விடையைத் தெரிவு செய்து அதற்குரிய தெரிவின் இலக்கத்தை வினாவின் எதிரேயுள்ள புள்ளிக்கோட்டில் எழுதுக.
06. எழுத்து C வேலை செய்யாத இரண்டு நாட்களும் எவை?
(1) திங்கள், புதன் (2) செவ்வாய், வெள்ளி
(3) வியாழன், வெள்ளி (4) செவ்வாய், வியாழன் (…………….)
07. எழுத்து F வேலை செய்யும் இரண்டு நாட்களும் எவை?
(1) திங்கள், புதன் (2) செவ்வாய், வெள்ளி
(3) புதன் வெள்ளி (4) செவ்வாய், வியாழன் (…………….)
08. ஒரே குழுவினர் வேலை செய்யும் இரண்டு நாட்களும் எவை?
(1) திங்கள், புதன் (2) செவ்வாய், வெள்ளி
(3) புதன் வெள்ளி (4) செவ்வாய், வியாழன் (…………….)
09. வெள்ளிக்கிழமைகளில் வேலை செய்யும் மூவரும் யாவர்?
(1) எழுத்து A, C மற்றும் D (2) எழுத்து B, C மற்றும் D
(3) எழுத்து C, D மற்றும் E (2) எழுத்து D, E மற்றும் G (……………….)
10. எழுத்து D வேலை செய்வது பின்வரும் எந்த நாளில் ஆகும்?
(1) திங்கள் (2) செவ்வாய் (3) வியாழன் (4) வெள்ளி (……………..)