கடந்தகால மொழித்திறன் வினாக்கள் தொடராக பதிவேற்றப்படுகின்றது. தற்பொழுது இரண்டாவது தொடர் கீழே தரப்பட்டுள்ளது
கடந்தகால மொழித்திறன் வினாக்கள் தொடர் 2
Language Proficiency Series 2
01 தொடக்கம் 10 வரையுள்ள ஒவ்வொரு வினாவிலும் தரப்பட்டுள்ள சொல் வரிசை ஒவ்வொன்றிலும் பொருத்தமற்ற சொல்லைத் தெரிவு செய்து அதற்குரிய இலக்கத்தை வினாவின் எதிரேயுள்ள புள்ளிக் கோட்டின் மீது எழுதுக.
01. (1) நிந்தித்தல் (2) எள்ளல் (3) அரற்றல் (4) இகழ்தல் (………………)
02. (1) கவி (2) ஏடு (3) பனுவல் (4) நூல் (………………)
03. (1) விதப்புரை (2) விமர்சனம் (3) சிபார்சு (4) பரிந்துரை (……………..)
04. (1) காசினி (2) விசும்பு (3) ஞாலம் (4) மேதினி (………………)
05. (1) தாமரை (2) பங்கயம் (3) கமலம் (4) மல்லிகை (………………)
06. (1) நேத்திரம் (2) நயனம் (3) விழி (4) ஒழி (………………)
07. (1) இலக்கு (2) ஈடேற்றம் (3) இலட்சியம் (4) குறிக்கோள் (………………)
08. (1) ஊழல் (2) களங்கம் (3) கறை (4) குற்றம் (………………)
09. (1) நோன்பு (2) சஞ்சீவி (3) உபவாசம் (4) விரதம் (………………)
10. (1) பரிவு (2) கவின் (3) அழகு (4) எழில் (………………)
11 தொடக்கம் 20 வரையுள்ள ஒவ்வொரு வினாவிலும் தரப்பட்டுள்ள கூற்றுக்கு பொருத்தமான பழ மொழியினை புள்ளிக் கோட்டின் மீது எழுதுக.
11. யாருமற்ற அநாதரரை எல்லாம் வல்ல இறைவனே துணை நின்று காப்பான்.
…………………………………………………………………………………………………………………………………………………………………………................
12. அச்சமின்றி உண்மை கூறுவோன் பலரது வெறுப்புக்கும் ஆளாவான்.
………………………………………………………………………………………………………………………………………………………………………….
13. மனிதனுக்கு மன நிறைவைப் போன்று சுகமளிக்கும் செல்வம் வேறொன்றுமில்லை.
………………………………………………………………………………………………………………………………………………………………………….
14. ஒருவர் தாம் செய்யும் செயலாலேயே தமக்குத் தீங்கை ஏற்படுத்திக் கொள்வார்.
………………………………………………………………………………………………………………………………………………………………………….
15. தனித்து நிற்காது சகலரும் ஐக்கியப்படின் அதுவே வலிமையுடையது.
………………………………………………………………………………………………………………………………………………………………………….
16. துன்பங்களை அன்பவித்துக் கொண்டிருப்பவர்களுக்கே மேலும் மேலும் துன்பங்கள் ஏற்படுகின்றன.
………………………………………………………………………………………………………………………………………………………………………….
17. தன்னிடம் இருந்தால் மட்டுமே இன்னொருவருக்கு கொடுக்கலாம்.
………………………………………………………………………………………………………………………………………………………………………….
18. திறமையிருந்தால் எப்பொருளையும் திறமையாக பயன்படுத்தலாம்.
………………………………………………………………………………………………………………………………………………………………………….
19. செல்வந்தர்களைப்போல் நடந்தொள்வார்கள், செலவுக்குப் பணமில்லை.
………………………………………………………………………………………………………………………………………………………………………….
20. இறைபக்தி இல்லாத இடத்திலிருந்து விலகுதல் சிறந்தது.
………………………………………………………………………………………………………………………………………………………………………….
பின்வரும் உரைப்பகுதியை வாசித்து அதன் கீழே தரப்பட்டுள்ள கூற்றுக்கள் சரியாயின் சரி எனவும் பிழையாயின் பிழை எனவும் வினாவின் எதிரேயுள்ள புள்ளிக் கோட்டில் எழுதுக.
பிராந்திய அளவில் சமநிலையான வளர்ச்சி அடைவதற்கு உதவும் வகையில் பிராந்தியங்களுக்கிடையிலான இணைப்பை மேம்படுத்துவதற்கான அரசாங்கத்தின் பொறுப்பை நிறைவேற்றும் விருப்பை காண்பிக்கும் வகையில் 2011இல் போக்குவரத்துத் துறை குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை அடைந்தது. போக்குவரத்து துறையிலுள்ள அபிவிருத்தி முக்கியமாக வீதி அபிவிருத்தி துறையில் காணப்பட்டது. நெடுஞ்சாலை, விரைவுப்பாதை, பாலங்கள், வடக்கு கிழக்கு மாகாணங்களிலுள்ள வீதிகள் மீதான சிறந்த கவனத்துடன் தற்போதுள்ள வீதிகளைப் புனரமைத்தல், மற்றும் “மக நெகும” நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் கிராமிய வீதிகளை நிருமாணித்தல் என்பன 2011 இல் தொடர்ந்தன.
2011 நவம்பரில் பொதுமக்களுக்கு திறக்கப்பட்ட தெற்கு விரைவுப் பாதை போக்குவரத்து நுழைவு வழியாகத் திகழ்ந்து பெரியளவிலான சந்தைகளுடன் இணைப்பை ஏற்படுத்தி போக்குவரத்துச் செலவை பெருமளவிற்கு குறைத்து கூடிய பொருளாதார பெறுகைகளை உருவாக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இருப்பினும் நாட்டிலுள்ள கூடிய பயணிகள் மற்றும் பொதிகள் போக்குவரத்தினால் ஏற்படும் உயர்ந்த சாலைப் போக்குவரத்து நெரிசலை பார்க்கும் போது பொருளாதார திட்டமிடலில் முன்னெச்சரிக்கையான மதிப்பீடு அவசியமாகவுள்ளது.
(i) பிராந்தியங்களுக்கிடையிலான போக்குவரத்து இணைப்பு பிராந்திய சமநிலை வளர்ச்சிக்கு உதவும். (…………………)
(ii) 2011இல் போக்குவரத்து துறையின் அபிவிருத்தி வீதிப் போக்குவரத்து துறையில் மட்டும் காணப்பட்டது. (…………………)
(iii) பிராந்தியங்களுக்கிடையிலான போக்குவரத்து இணைப்பை மேம்படுத்துவது தனியார் துறையின் பொறுப்பாகும். (…………………)
(iv) நெடுஞ்சாலை என்பது நீண்ட அகன்ற பிரதான வீதியைக் குறிக்கும் (…………………)
(v) “மக நெகும” திட்டத்தின்கீழ் கிராமிய வீதிகளை நிருமாணித்தல் 2011இல் ஆரம்பிக்கப்பட்டது. (…………………)
(vi) பொருளாதார பெறுகைகளை ஏற்படுத்தும் என்ற எதிர் பார்ப்பிலேயே தெற்கு விரைவுப்பாதை அமைக்கப்பட்டது. (…………………)
(vii) ஏற்கனவே உள்ள வீதிகளை மீளத் திருத்தியமைத்தலே வீதிப் புனரமைப்பு எனப்படும். (…………………)
(viii) பயணிகள் போக்குவரத்தினாலேயே உயர்ந்தளவில் சாலைப் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. (…………………)
நிதிநடைமுறைகள் கடந்தகால வினாவிடைகள்