Teaching

Sunday, June 7, 2020

சமூக பொருளாதார அரசியல் பின்னணி அதன் போக்குகள் 2020

கடந்த காலங்களில் நடைபெற்ற போட்டிப் பரீட்சைகளில் இலங்கையின் சமூக பொருளாதார அரசியல் பின்னணி மற்றும் அதன் போக்குகள் தொடர்பான வினாப்பத்திரங்களில் இடம்பெற்ற வினாக்கள் தொகுக்கப்பட்டு கீழே தரப்பட்டுள்ளன.



இலங்கையின் சமூக பொருளாதார அரசியல் பின்னணி மற்றும் அதன் போக்குகள் 

Social, Economic, Political Background and Trends in Sri Lanka  

01 தொடக்கம் 20 வரையுள்ள ஒவ்வொரு வினாவிற்குமான சரியான அல்லது மிகவும் பொருத்தமான விடையைத் தெரிவு செய்து அதற்குரிய தெரிவினது இலக்கத்தை வினாவின் எதிரேயுள்ள புள்ளிக்கோட்டின் மீது எழுதுக.

01. சார்க் வலய நாடுகளின் பண அலகுகளில் இலங்கையின் ரூபாவிற்கு சார்பாக உயர் மாற்று வீதப் பெறுமதி பண அலகு காணப்படுவது இவற்றில் எந்த நாட்டிலாகும்?

(1)  நேபாளம்                 (2)  பூட்டான்                  (3)  மாலைதீவு              (4) இந்தியா                                        (…………………..)

02. நுகர்வோர் பொருட்கள் தொடர்பான முறைப்பாட்டை முன் வைக்க வேண்டிய இலங்கை ரெலிகொம் இனது உடனடி தொலைபேசி இலாக்கம் இவற்றுள் எதுவாகும்?

(1)  1919                 (2)  1929                  (3)  1967              (4) 1977                                        (…………………..)

03. 2013ம் ஆண்டினது இலங்கை மத்திய வங்கியின் ஆண்டறிக்கைக்கேற்ப இலங்கைக்கு அதிகளவில் வெளிநாட்டுச் செலாவணி செலவிடப்பட்ட நான்கு இறக்குமதிப் பொருள் வகைகளையும் இறங்குவரிசை ஒழுங்கு முறையில் காட்டுவது கீழுள்ளவற்றுள் எதுவாகும்?

(1) எரிபொருள், பொறியும் கருவியும், புடைவைகள், மற்றும் அதற்கான துணைப் பொருட்கள், உணவும் குடிபானங்களும்.

(2) எரிபொருள், புடைவைகள், மற்றும் அதற்கான துணைப் பொருட்கள், உணவும் குடிபானங்களும், பொறியும் கருவியும், 

(3) எரி பொருள், உணவும் குடிபானங்களும், பொறியும் கருவியும், புடைவைகள், மற்றும் அதற்கான துணைப் பொருட்கள்

(4) எரிபொருள்,உணவும் குடிபானங்களும், புடைவைகள், மற்றும் அதற்கான துணைப் பொருட்கள், பொறியும் கருவியும்.              (…………………)

04. இந்நாட்டின் மொத்த மின் உற்பத்திக்காக நீர்மின் சக்தியை பெறுவதற்கான பங்களிப்பு குறைந்த மட்டத்தில் காணப்படுவதற்குரிய காரணமாக கருதப்பட முடியாதது பின்வருவனவற்றுள் எதுவாகும்.

(1) காலநிலை மாற்றம் காரணமாக நீர் தேக்கங்களுள் சேமிக்கப்படும் நீரினது கொள்ளளவு குறைவடைதல்,

(2) மாற்று எரிபொருளைப் பயன்படுத்தி உற்பத்தி செய்யப்படும் மின்சக்தியின் அளவு அதிகரித்துக் காணப்படல்.

(3) நீர் மின் நிலையங்களும் நீர் தேங்கு பிரதேசங்களும் ஒழுங்காகப் பரமரிக்கப்படாமை.

(4) காணப்படும் நீர் மின்சக்தி வளங்களை உச்சளவில் பயன்படுத்திக் கொள்ளல்.                              (…………………….)

05. அண்மையில் இலங்கையில் முதலாவது பழங்களுக்கான ஆய்வு மற்றும் அபிவிருத்தி மத்திய நிலையம் திறந்து வைக்கப்பட்டது பின்வரும் எந்தப் பிரதேசத்திலாகும்?

(1)  ஹொறண                 (2)  பிபிலை                 (3)  மல்வானை             (4) அம்பிலிப்பிட்டிய                                        (…………………..)

06. 1978ம் ஆண்டின் இலங்கை சனநாயக சோசலிச குடியரசின் அரசியலமைப்பு சட்டத்திற்கேற்ப சனாதிபதி பதவியை வகித்துக் கொண்டிருக்கும் ஒருவருக்கு புதிய சனாதிபதி தெரிவிற்காக பூரணப் படுத்தியிருக்க வேண்டிய மிகக்குறைந்த பதவிக்காலம் எத்தனை வருடங்களாகும்?

(1)  3                 (2)  4                 (3)  5             (4) 6                                        (…………………..)

07. இலங்கையின் முதலாவது விவசாயக் குடியேற்றத்திட்டம் இவற்றுள் எது?

(1)  கல்லோயா                 (2)  கிரிதலே                 (3)  மின்னேரியா             (4) மினிப்பே                                        (…………………..)

08. இலங்கையின் நான்கு தேசிய மரபுரிமை அமைவிடங்களாக யுனெஸ்கோவினால் பிரகடனப் படுத்தப்பட்டவை இவற்றுள் எவை?

(1)  ரன்கிரி தம்புலுவிகாரை, எம்பெக்க தேவாலயம், சிங்கராஜவனம், தலதா மாளிகை

(1)  சிகிரியா,மாத்தளை அலுவிகாரை, எம்பெக்க தேவாலயம், கதிர்காமம்

(1)  மாத்தளை அலுவிகாரை, சிங்கராஜவனம், காலிக்கோட்டை, கதிர்காமம்

(1)  சிகிரியா, ரன்கிரி தம்புலுவிகாரை,  தலதா மாளிகை, காலிக்கோட்டை                                      (……………………….)

09. 1833ம் ஆண்டிலே கோல்புறூக் சீர்திருத்த ஆலோசனை மூலம் அமைக்கப்பட்ட இலங்கை சிவில் சேவையை இல்லாதொழித்து அதற்காக தற்போதைய இலங்கை நிர்வாக சேவை அமைக்கப்பட்டது எந்த ஆண்டிலாகும்?

(1)  1972                 (2)  1963                 (3)  1960             (4) 1956                                        (…………………..)

10. நீதிமன்றத்தின் சுயாதீனத்தை உறுதி செய்வதற்காக தற்போதைய இலங்கை சனநாயக சோசலிச குடியரசின் அரசியல் அமைப்பில் வழங்கப்பட்டுள்ள ஏற்பாடுகள் அல்லாதது பின்வருவனவற்றுள் எது? 

(1)  உயர் நீதிமன்ற நீதிபதிகளின் சம்பளங்களை ஒன்றிணைந்த நிதியத்திலிருந்து செலுத்துதல். 

(2)  நீதிபதிகள் தனது பதவியிலிருந்து ஆற்றும் கடமைகளுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்ய முடியாதிருத்தல்.

(3)  நீதிச்சேவை ஆணைக்குழுவை நியமித்தல்.

(4)  ஜனாதிபதியின் சுய விருப்பின் அடிப்படையில் உயர் நீதிமன்றங்களின் நீதிபதிகளை அகற்ற முடியாதிருத்தல்.     (…………….)

11. தேசிய பயிலுனர் மற்றும் தொழிற்பயிற்சி அதிகாரசபை (NAITA) நிருவகிக்கப்படுவது பின்வரும் எந்த அமைச்சின் கீழாகும்?

(1)  தொழிலாளர் மற்றும் தொழிலாளர் தொடர்பு அமைச்சு

(2)  உயர்கல்வி மற்றும் பெருந்தெருக்கள் அமைச்சு

(3)  தொழிநுட்ப மற்றும் ஆராய்ச்சிகள் அமைச்சு

(4)  தேர்ச்சி அபிவிருத்தி மற்றும் தொழிற்பயிற்சி அமைச்சு                                       (………………………….)

12. தற்போதைய இலங்கையில் சனத்தொகை கூடிய ஐந்து மாகாணங்களை ஏறுவரிசையில் சரியாகக் கொண்டுள்ள தொடர் எது?.

(1)  சப்ரகமுவ, வடமேல், தென், மத்திய, மேல், 

(2)  மத்திய,வடமேல், சப்ரகமுவ, தென், மேல், 

(3)  மத்திய, சப்ரகமுவ, வடமேல், தென், மேல், 

(4)  வடமேல், சப்ரகமுவ, தென், மத்திய, மேல்,                                                              (……………….)

13. பின்வருவனவற்றுள் கொழும்பு பங்குச் சந்தையில் செயலாற்றுகை பகுப்பாய்வுக்கெனப் பயன்படுத்தப்படும் சுட்டெண் யாது?

(1)  கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண்,

(2)  மிலங்கா சுட்டெண்,

(3)  வாழ்க்கை செலவு சுட்டெண்

(4)  தனி நபர் வருமானச் சுட்டெண்                                                  (……………………)

14. மத்தியகால சிங்கள கலைகள் (Medieval Sinhalese Arts) என்ற பிரபல நூலை எழுதியவர்.

(1)  பேராசிரியர் குணபால மலலசேகர, 

(2)  கலாநிதி ஆனந்த குமாரசாமி

(3)  பேராசிரியர் செனரத் பரண விதான

(4)  கலாநிதி நந்ததேவ விஜேசேகர                                            (……………………)

14. மத்தியகால சிங்கள கலைகள் (Medieval Sinhalese Arts) என்ற பிரபல நூலை எழுதியவர்.

(1)  பேராசிரியர் குணபால மலலசேகர, 

(2)  கலாநிதி ஆனந்த குமாரசாமி

(3)  பேராசிரியர் செனரத் பரண விதான

(4)  கலாநிதி நந்ததேவ விஜேசேகர                                            (……………………)

15. நான்காவது பரம்பரை (4 G) இணைய வசதிகளினால் முழுத்தீவையும் உள்ளடக்கும் “கூகுள் லூன்.(Google Loon)” செயற்திட்டத்தின் இலங்கைத் தரப்பினராகப் பங்களிக்கும் நிறுவனம் பின்வருவனவற்றுள் எது?

(1)  கொழும்பு பல்கலைக்கழக கணினி மற்றும் தகவல் தொழில்நுட்ப பீடம்

(2)  இலங்கைத்தகவல் தொழிநுட்பத் தொடர்பாடல் பிரதிநிதித்துவ நிறுவனம், 

(3)  இலங்கைத் தொலைத் தொடர்புகளைக் கட்டுப்படுத்தும் ஆணைக்குழு, 

(4)  இலங்கை ரெலிகொம் கம்பனி,                                            (……………………)

மொழித்திறன் வினாப்பத்திரங்கள்  

சமூக பொருளாதார அரசியல் தொடர்பான வினாவிடைகள் எதிர்வரும் நாட்களில் தொடராக பதிவேற்றப்படும். இலங்கை நிருவாக சேவை உட்பட பலவகையான போட்டிப்பரீட்சைகளுக்கு முகம் கொடுக்க வேண்டிவர்கள் சமூக பொருளாதார அரசியல் தொடர்பில் கூடுதலான அறிவை வளர்த்துக்கொள்ள இத்தளம் வழிவகுக்கும்.

இலங்கையின் சமூக பொருளாதார அரசியல் நிலைமைகளானது மிக மிக விரைவாக மாற்றங்கள் அடைந்து வருகின்றது. இதன்காரணமாக நாளுக்கு நாள் புதுவிதமான தகவல்கள் வெளியாவதுடன் கூடுதலான தகவல்கள் மாற்றமடைந்து கொண்டிருக்கின்றன. இதன் காரணமாக சமூக பொருளாதார அரசியல் நிலைமைகளை இடைவிடாது கற்க வேண்டிய சூழ்நிலை உருவாகின்றது.

எனவே தொடர்ந்து சமூக பொருளாதார அரசியல் நிலைமைகளை அறிந்து கொள்ள இத் தளத்துடன் இணைந்திருங்கள்.

அரச நிதிநடைமுறைகள் வினா விடைகள்