கடந்த காலங்களில் நடைபெற்ற போட்டிப்பரீட்சைகளிலிருந்து பெறப்பட்ட பொதுவிவேகம் General Intelligent Paper 01 வது தொடர் கீழே தரப்பட்டுள்ளது.
பொதுவிவேகம் General Intelligent Paper 01
01 தொடக்கம் 05 வரையான ஒவ்வொரு வினாவிற்கும் நான்கு தெரிவுகளைக் கொண்ட வெவ்வேறு சொற்கள் / சொற்சோடிகளைக் கொண்டுள்ளன. அவற்றுள் மூன்று தெரிவுகளின் சொற்கள் / சொற்சோடிகள் மாத்திரம் நிதி முகாமைத்துவ முறையுடன் தொடர்புபட்ட வகையில் கூட்டமாக்கப்படக்கூடியவை. எஞ்சிய தெரிவு குறித்து நிற்கும் இலக்கத்தை வினாவின் எதிரேயுள்ள புள்ளிக்கோட்டின் மீது எழுதுக.
01. (1) குறிக்கோள் (2) நோக்கம் (3) திட்டம் (4) இலக்கு (……………..)
02. (1) பற்றுச்சீட்டு (2) சிட்டை (3) உறுதிப்பத்திரம் (4) விலைப்பட்டியல் (……………..)
03. (1) செல்வம் (2) ஆதனம் (3) பெறுமதி (4) சொத்து (……………..)
04. (1) பணத் தாள்கள் (2) காசு காசோலைகள் (3) பரிசு உறுதிப்பத்திரம் (4) கடன் அட்டை (……………..)
05. (1) மானியம் (2) நிதியம் (3) பரிசு (4) விருது (……………..)
06 தொடக்கம் 10 வரையான வினாக்கள் பின்வரும் தகவல்களை அடிப்படையகக் கொண்டவை.
உள்ளூர் நிதி நிறுவனங்களின் வரிசைப்படுத்தலில் பெறப்பட்ட பெறுபேறுகளுக்கேற்ப தனபால என்பவர் தமக்குத் தேவையான A,B,C.D எனும் நான்கு நிறுவனங்களின் தகவல்களைக் கொண்ட ஆவணம் ஒன்றைத் தயாரித்தார். இந்நான்கு நிறுவனங்களும் அவர் வசிக்கும் மாவட்டத்திலேயே அமைந்துள்ளன. இவ்வொவ்வொரு நிறுவனத்தினதும் தேசிய மட்ட வரிசைநிலை (rank) தவிர்ந்த அவர் வசிக்கும் மாகாண வரிசை நிலை, மாவட்டத்தின் வரிசை நிலை ஆகியவற்றை பதிவு செய்தார். அவரது ஆவணத்தின் பிரதி ஒன்றில் இருந்து பெறப்பட்ட தகவல்கள் கீழே அட்டவணையில் காட்டப்பட்டுள்ளன. அப்பிரதியில் இலக்கங்கள் தெளிவற்றிருந்த இடங்களில் பின்வரும் அடையாளங்கள் &, %, @, $, #, காட்டப்பட்டுள்ளன. சிறந்த நிறுவனத்திற்கு இலக்கம் 1 என்ற வகையில் வரிசை நிலை இலக்கமிடப்பட்டிருக்கின்றது. இவ் வரிசைப் படுத்தலில் எந்தவொரு நிறுவனமும் சமமான இடத்தை பெறவில்லை.
இதற்கேற்ப பின்வரும் ஒவ்வொரு வினாவிற்கும் உரிய சரியான விடையைத் தெரிவு செய்து அதனைக் குறிக்கும் தெரிவின் இலக்கத்தை வினாவின் எதிரேயுள்ள புள்ளிக்கோட்டின் மீது எழுதுக.
06. @ மற்றும் # இனால் குறிக்கப்பட்டுள்ள நிலைகள் முறையே,
(1) 1,1 (2) 1,2 (3) 1,3 (4) 2,3 (…………..)
07. தனபால வசிக்கும் மாகாணத்தில் உள்ளதும் அவர் வசிக்கும் மாவட்டத்தில் இல்லாததுமான நிறுவனம் B இலும் சிறந்த நிறுவனமாக வரிசைப்படுத்தப்பட்டுள்ள நிறுவனங்களின் எண்ணிக்கை.
(1) 0 (2) 1 (3) 3 (4) 12 (…………..)
08. இங்கு $ இனால் குறித்துக் காட்டப்படும் மாவட்ட வரிசை நிலை என்ன?
(1) 1 (2) 3 (3) 4 (4) 5 (…………..)
09. தனபால வசிக்கும் மாகாணத்தில் உள்ள நிறுவனங்களுள், நிறுவனம் A இலும் பார்க்க சிறந்த நிலையில் உள்ள நிறுவனங்களின் எண்ணிக்கையிலும் பார்க்க 5 மடங்கு எண்ணிக்கையான நிறுவனங்கள் தேசிய மட்டத்தில் வரிசை நிலைப்படுத்தப்பட்டிருப்பின் & எனும் குறியீட்டால் அடையாளப்படுத்தப்பட்டுள்ள வரிசை நிலை யாது?
(1) 12 (2) 13 (3) 16 (4) 20 (…………..)
10. பின்வரும் இலக்கங்களில் எது % இனால் குறித்துக் காட்டப்பட்டுள்ள இலக்கமாக இருக்க முடியாது?
(1) 30 (2) 32 (3) 50 (4) 52 (…………..)
11 தொடக்கம் 15 வரையுள்ள வினாக்கள் பின்வரும் தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை.
தொழிலாளி ஒருவர் திங்களில் இருந்து வெள்ளிவரை பெற்ற பணத்தை போக்குவரத்து, காகிதாதிகள் மற்றும் உணவிற்காக மாத்திரம் செலவிட்ட முறையானது தவறுகளுடன் கீழே தரப்பட்ட அட்டவணையில் பதிவு செய்யப்பட்டுள்ளது. கொடுக்கப்பட்டுள்ள தகவல்களின்படி அட்டவணையில் நான்கு பெறுமானங்கள் மாத்திரம் தவறாக அட்டவணைப்படுத்தப்பட்டுள்ளது. அவற்றைக் கீழே தரப்பட்டுள்ள குறிப்புக்களில் இருந்து அடையாளம் காணமுடியும்.
மேற்குறித்த அட்டவணையில்
இதற்கேற்ப பின்வரும் ஒவ்வொரு வினாவிற்குமுரிய சரியான விடையைத் தெரிவு செய்து அதற்குரிய தெரிவின் இலக்கத்தை வினாவின் எதிரேயுள்ள புள்ளிக்கோட்டின் மீது எழுதுக.
16. புதன்கிழமை தொடர்பான தவறான பெறுமதி எந்த நிரலில் உள்ளது?
(1) கிடைக்கப் பெற்ற பணம் (2) போக்குவரத்து செலவு (3) மொத்தச் செலவு (4) மீதிப்பணம் (……………………….)
17. “கிடைக்கப்பெற்ற பணம்” நிரலில் உள்ள தவறு என்ன?
(1) மொத்தம் 6100 என குறிப்பிடப்பட்டுள்ளமை
(2) திங்கள் பெற்ற பணம் ரூ. 900 எனக் குறிப்பிடப்படாமை
(3) திங்கள் பெற்ற பணம் ரூ. 1100 எனக் குறிப்பிடப்படாமை
(4) புதன்கிழமை பெற்ற பணம் ரூ. 1100 எனக் குறிப்பிடப்படாமை (………………………….)
18. “காகிதாதிகள் செலவு” நிரலில் உள்ள தவறை எவ்வாறு திருத்தலாம்?
(1) திங்கட்கிழமைக்குரிய பணம் ரூ. 100 எனத் திருத்தப்படல்
(2) புதன்கிழமைக்குரிய பணம் ரூ. 50 எனத் திருத்தப்படல்
(3) வெள்ளிக்கிழமைக்குரிய பணம் ரூ. 150 எனத் திருத்தப்படல்
(4) மொத்தப்பணம் எனக் குறிக்கப்பட்ட பணம் ரூ. 1050 எனத் திருத்தப்படல் (………………………)
19. ஐந்து நாட்கள் முடிவில் கிடைக்கப்பெற்ற பணத்தில் மீதியாகவுள்ள பணம் எவ்வளவு?
(1) ரூபா 1700 (2) ரூபா 1600 (3) ரூபா 1550 (4) ரூபா 1500 (……………………….)
20. வியாழக்கிழமை உணவிற்காக செலவு ரூபா 500 ஆகப் பதிவுசெய்யப்பட்ட முழு அட்டவணையிலும் எத்தனை பெறுமானங்கள் திருத்தப்பட வேண்டும்?
(1) 3 (2) 4 (3) 5 (4) 6 (……………………….)