ஆசிரியர் போட்டிப்பரீட்சைக்கான வினாக்கள் Teaching Competitive Exam Tamil Paper 1
இலங்கையிலுள்ள பட்டதாரிகள் மற்றும் ஏனையோரை இலங்கை ஆசிரியர் சேவையில் இணைத்துக்கொள்ளும் பொருட்டு கல்வி அமைச்சு, மற்றும் மாகாண சபைகள் ஆகியவற்றினால் நடாத்தப்படும் போட்டிப்பரீட்சைகளுக்கு (Teaching Competitive Exam) பொருத்தமாக கடந்தகாலங்களில் இடம்பெற்ற போட்டிப்பரீட்சைகளில் இடம்பெற்ற வினாக்கள் உட்பட புதிய வினாக்கள் தொடராக கீழே தரப்பட்டுள்ளன.
இலங்கை ஆசிரிய சேவையில் ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்புவதற்கான ஆட்சேர்ப்பு போட்டிப்பரீட்சை Teaching Competitive Exam Tamil Paper 1
பொது அறிவு
01 தொடக்கம் 20 வரையான ஒவ்வொரு வினாக்களுக்கும் அதன் ழே தரப்பட்டுள்ள விடைகளில் பொருத்தமான விடையினை தெரிவு செய்து எதிரேயுள்ள புள்ளிக்கோட்டில் எழுதுக.
01. இலங்கை கல்வி அமைச்சின் கீழ் கல்விச்சேவைகளாக வகுக்கப்பட்டுள்ள சேவைகள்
(1) 1 (2) 2 (3) 3 (4) 4. (……………)
02. மேல் மாகாணத்திலுள்ள கல்வி வலயங்கள்
(1) 8 (2) 11 (3) 14 (4) 17. (……………)
03. 13 வருட உத்தரவாதப் படுத்தப்பட்ட கல்வி நிகழ்ச்சித்தின் மூலம் மாணவர் ஒருவர் தொழில்வாண்மை பயிற்சி பாடத்திட்டத்தை நிறைவு செய்வதன் மூலம் பெற்றுக்கொள்ளக்கூடிய அதிகூடிய தேசிய தொழிற்தகைமை மட்டம்
(1) NVQ I (2) NVQ 2 (3) NVQ III (4) NVQ IV. (……………)
04. கற்பித்தல் செயன்முறைக்கு மிகவும் பொருத்தமான மூலாதாரம்,
(1) மாதிரி வினாத்தாள் (2) ஆசிரியர் வழிகாட்டல் கையேடு (3) சம்பந்தப்பட்ட பாடநூல்கள் (4) பாடத்திட்டம் (……………)
05. இலங்கையில் நினைவு கூரப்படும் ஆசிரியர் தினம்,
(1) ஒக்டோபர் 01 (2) செப்டெம்பர் 17 (3) ஒக்டோபர் 06 (4) மார்ச் 08 (……………)
06. 1978இன் பின்னர் இலங்கையில் கல்வியோடு தொடர்பான சகல நியமனங்கள் மற்றும் பதவி உயர்வுகள் விவகாரங்களை நிறைவேற்றுவதற்குப் பொறுப்பான சுயாதீன ஆணைக்குழு,
(1) கல்விச் சேவைகள் ஆணைக்குழு (2) பகிரங்க சேவை ஆணைக்குழு (3) உயர்கல்வி ஆணைக்குழு (4) தேசிய கல்வி ஆணைக்குழு (……………)
07. 2014 இலங்கை ஆசிரியர் சேவைச் சட்டக்கோவையின்படி ஆசிரியர் தொழிலுக்கு சேர்த்துக் கொள்வதற்கு தகுதி பெறும் வயதெல்லை,
(1) 24 – 40 வருடங்கள் (2) 21 – 40 வருடங்கள் (3) 20 – 36 வருடங்கள் (4) 18 – 35 வருடங்கள் (……………)
08. இலங்கையில் கட்டாயக்கல்வி வயதெல்லை,
(1) 05 – 18 வருடங்கள் (2) 05 – 14 வருடங்கள் (3) 06 – 18 வருடங்கள் (4) 05 – 16 வருடங்கள் (……………)
09. பாடசாலை அபிவிருத்தி சபையொன்றில் உறுப்புரிமையை பெற்றுக்கொள்ள முடியாதவர்கள்,
(1) பிள்ளையினது பெற்றோர்
(2) பிள்ளையினது சட்டபூர்வமான பாதுகாவலர்கள்
(3) பாடசாலையில் கடமையாற்றும் ஆசிரியர்கள்
(4) பாடசாலையில் ஓய்வு பெற்றுச் சென்றுள்ள ஆசிரியர்கள் (……………)
10. பாடசாலை அபிவிருத்தி சங்கமொன்றில் தீர்மானங்களையும், முடிவுகளையும் எடுப்பதற்கு ஸ்தாபிக்கப்படும் அமைப்புக்குழு,
(1) பாடசாலை முகாமைத்துவ குழு
(2) கல்வி அபிவிருத்திக்குழு
(3) பாடசாலை அபிவிருத்தி நிறைவேற்றுக்குழு
(4) பெற்றார் ஆசிரியர் சங்கம் (……………)
11. வலயமொன்றில் அமைந்துள்ள ஆசிரிய மத்திய நிலையத்தின் தலைவராக நியமிக்கப்பட வேண்டியவர்,
(1) ஆசிரிய ஆலோசகர் ஒருவர்
(2) இலங்கை அதிபர் சேவையின் அலுவலர் ஒருவர்
(3) இலங்கை கல்வி நிர்வாக சேவையின் அலுவலர் ஒருவர்
(4) ஆசிரியர் கல்வியியலாளர் சேவையின் அலுவலர் ஒருவர் (……………)
12. புதிதாக ஸ்தாபிக்கப்படும் பாடசாலை அபிவிருத்திச் சங்கம், பாடசாலை நிறைவேற்றுக்குழு, மற்றும் பாடசாலை நிறைவேற்றுக்குழு ஆகியவற்றிற்குரிய பதவியணியின் பெயர் மற்றும் பதவி உள்ளடங்கிய அறிக்கையினை அங்கீகாரத்திற்க்காக சமர்ப்பிப்பது,
(1) வலயக்கல்விப் பணிப்பாளரிடம்
(2) கோட்டக்கல்விப் பணிப்பாளரிடம்,
(3) பாடசாலை அதிபரிடம்
(4) கல்வியமைச்சின் செயாளரிடம் (……………)
13. பிள்ளையொருவரை பாடசாலைக்கு சேர்க்கும்போது அவசியமான ஆவணமொன்றாக அமைவது,
(1) மாணவர்களின் பாடசாலை விடுகைப் பத்திரம்
(2) மாணவர்களின் பிறப்புச் சான்றிதழ்
(3) கிராம அலுவலரின் சான்றிதழ்
(4) பிள்ளையின் பாதுகாவலரின் பிறப்பு சான்றிதழ் (……………)
14. மாகாணசபை பாடசாலைகளில் ஆசிரியர்களின் தனிப்பட்ட கோப்புக்கள் பேணப்படுவது,
(1) மாகாண கல்வித்திணைக்களத்தில்
(2) வலய கல்வி அலுவலகத்தில்
(3) கோட்டக்கல்வி அலுவலகத்தில்
(4) மாகாண கல்வி அமைச்சின் அலுவலகத்தில் (……………)
15. மாகாணசபைக்குரிய பாடசாலையொன்று தேசிய பாடசாலையாக தரமுயர்த்தப்படுவது,
(1) மத்திய கல்வி அமைச்சின் கல்வி அமைச்சரினால்
(2) மாகாண ஆளுநரினால்
(3) மாகாண கல்வி அமைச்ச்ரினால்
(4) மாகாணத்தின் முதலமைச்ச்ரினால் (……………)
16. ஜனாதிபதியின் பிரதிநிதியாகவும், மாகாணசபையின் நிறைவேற்று அலுவலராகவும் செயற்படுபவர்,
(1) முதலமைச்சினது செயலாளர்,
(2) மாகாண ஆளுநர்
(3) முதல் அமைச்சர்
(4) பிரதம செயலாளர் (……………)
17. தேசிய கல்வி மற்றும் கொள்கைகளுக்கு அமைவாக பாடசாலையில் கல்விப்பயன் பெறுவோரின் கல்வி எதிர்பார்ப்புக்கள் மற்றும் நோக்கத்தினை நிறைவேற்றக் கூடியவாறும், பாடசாலை அமைந்துள்ள பிரதேசத்தில் சமூக, கலாச்சார மற்றும் பொருளாதார ரீதியில் விளைதிறன் மிக்க மாற்றங்களை ஏற்படுத்துவதிலும் அனுசரணையாக இருக்கும் விததில் ஸ்தாபிக்கப்படும் அமைப்பு.
(1) பாடசாலை முகாமைத்துவ குழு
(2) பாடசாலை அபிவிருத்தி நிறைவேற்றுக் குழு
(3) பாடசாலை அபிவிருத்திச் சங்கம்
(4) கல்வி அபிவிருத்தி சங்கம் (……………)
18. அரசியலைப்பு மறுசீரமைப்பு மூலம் மாகாணசபை பாடசாலைகள் என்ற பெயரில் வகைப்படுத்தல்கள் மேற்கொள்ளப்பட்ட ஆண்டு
(1) 2006 (2) 1988 (3) 1978 (4) 1972 (……………)
19. பாடசாலையொன்றின் கல்வி பயிலும் மாணவர்களின் எண்ணிக்கை 1200 ஆகும். அங்கு தரம் 1 தொடக்கம் தரம் 13 வரையிலான வகுப்புக்கள் நடைபெறுகின்றன. உயர்தரத்தில் கலை மற்றும் வணிக பாடத்துறைகளும் உள்ளன. அந்தப்பாடசாலை எந்த வகைக்குள் உட்படும்?
(1) 1A (2) 1AB (3) 1C (4) II (……………)
20. கிழக்கு மாகாணத்திலுள்ள கல்வி வலயங்களின் எண்ணிக்கை,
(1) 15 (2) 16 (3) 13 (4) 14 (……………)