Teaching

Tuesday, June 2, 2020

மொழித்திறன் வினாக்கள் தொடர் 1

அனைத்து தேவைகளுக்காகவும் நடைபெறும் போட்டிப்பரீட்சைகளில் அடங்கும் மொழித்திறன் பரீட்சைக்கான மொழித்திறன் வினாக்கள் தொடர் 01 கீழே தரப்பட்டுள்ளன.



இவ்வினாக்களில் இலங்கை பரீட்சைகள் திணைக்களத்தினால் கடந்த காலங்களில் நடைபெற்ற மொழித்திறன் பரீட்சைகளில் இடம்பெற்ற மொழித்திறன் வினாக்களும் தரப்பட்டுள்ளன. 

01 தொடக்கம் 10 வரையுள்ள ஒவ்வொரு வினாவிலும் தரப்பட்டுள்ள சொல்வரிசை ஒவ்வொன்றிலும் சரியாக எழுத்துக் கூட்டப்பட்ட சொல்லைத் தெரிவு செய்து அதற்குரிய இலக்கத்தினை வினாவின் எதிரேயுள்ள புள்ளிக்கோட்டின் மீது எழுதுக. 

01. (1) தீர்க்கதரசி          (2) கலைக்கழஞ்சியம்             (3) கடிநம்                 (4) உபகாரம்                      (……………..) 

02. (1) வாழ்கை          (2) சர்ச்சை             (3) யதார்தம்                (4) கைநூல்                      (……………..) 

03. (1) செலவாணி          (2) நாகரீகம்             (3) அழைப்பாணை                 (4) வர்த்தமாணி                    (……………..) 

04. (1) தவிசாளர்          (2) செயலாலர்             (3) உருப்பினர்                (4) முகாமையாலர்                      (……………..) 

05. (1) மஞ்சட்காமாலை          (2) நீரழிவு             (3) காச்சல்                 (4) குறுதிச்சோகை                      (……………..) 

06. (1) துறப்புக்கோவை          (2) சுகவீனம்            (3) மேன்பாடு                 (4) தாள்வாரம்                      (……………..) 

07. (1) நிட்சயம்          (2) பிரச்சினை            (3) ஆராட்சி                 (4) மேற்க்கோள்                      (……………..) 

08. (1) பல்கலைக்கழகம்          (2) பாராழுமன்றம்            (3) தினைக்களம்                 (4) நிருவனம்                     (……………..) 

09. (1) நிலமை          (2) பகைமை             (3) கயைமை                 (4) தகமை                      (……………..) 

10. (1) அங்குரார்ப்பணம்          (2) புனருத்தாரனம்          (3) நிவாரனம்                (4) சமர்பணம்                      (……………..) 

11 தொடக்கம் 20 வரையுள்ள ஒவ்வொரு வினாவிலும் தரப்பட்டுள்ள சொற்களுக்குரிய எதிர்க்கருத்துச் சொற்களை வினாவின் எதிரேயுள்ள புள்ளிக் கோட்டின் மீது எழுதுக.

11. ஞானம்                            (……………………………………………)

12. சரீரி                            (……………………………………………)

13. மருள்                            (……………………………………………)

14. தவப்பொழுது                  (……………………………………………)

15. மங்கலம்                            (……………………………………………)

16. உபசாரம்                            (……………………………………………)

17. கனிஸ்ட                            (……………………………………………)

18. இணக்கம்                            (……………………………………………)

19. புராதனம்                           (……………………………………………)

20. ஆரோகணம்                           (……………………………………………)

21 தொடக்கம் 30 வரையுள்ள ஒவ்வொரு வினாவிலும் தரப்பட்டுள்ள வாக்கியங்களுக்குப் பொருத்தமான சொல்லை அடைப்புக்குள்ளிருந்து தெரிவு செய்து இடைவெளியில் எழுதிப் பூரணப்படுத்துக.

21. பாடசாலையில் இடம்பெற்ற கலாச்சார விழாவிற்குப் பல பிரமுகர்கள் ……………………. (சமூகமளித்திருந்தனர்/ சமுகமளித்திருந்தனர்)

22. வீடுகள்பல ………………………… மூழ்கின. (வெள்ளத்தில்/ வெள்ளத்தினால்)

23. ஒவ்வொரு ……………………. குறைந்தது பத்து வருடங்களுக்கு ஒரு முறையாவது சனத்தொகை மதிப்பீடு நடைபெறுவதுண்டு. (நாட்டிலும்/ நாடுகளிலும்)

24. எந்தவொரு …………………. மொழிபேதம் இல்லை. (நாட்டிலும்/ நாடுகளிலும்)

25. கடலோரம் வீசிய காற்று இதமாக ……………………… (இருந்தது/ இருந்தன)

26. ………………….. அனைவரும் பத்திரமாக வீடு திரும்பினர். (மீனவர்/ மீனவர்கள்) 

27. சம்பளக் கோரிக்கையை முன்வைத்து ………………….. வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். (தொழிலாளர் / தொழிலாளர்கள்)

28. போக்குவரத்து தடங்கல் காரணமாக …………………….. அலுவலகத்திற்கு தாமதமாகவே வந்தனர். (உத்தியோகத்தர்/ உத்தியோகத்தர்கள்)

29. நோயாளிகள் எவரும் …………………………. (குணமடைந்து விட்டனர்/ குணமடைய வில்லை.)

30. …………………….. இன்று உரமானியங்கள் வழங்கி வைக்கப்பட்டன.(தொழிலாளர்களுக்கு/ விவசாயிகளுக்கு)

31. தொடக்கம் 40 வரையுள்ள ஒவ்வொரு வினாவிலும் தரப்பட்டுள்ள சொற்கூட்டங்கள் ஒவ்வொன்றுக்கும் பொருத்தமான தனிச்சொல்லை வினாவின் எதிரேயுள்ள புள்ளிக்கோட்டின் மீது எழுதுக.

31. ஐம்பதாவது ஆண்டு நிறைவில் கொண்டாடப்படும் விழா             (………………………)

32. இலங்கயிலுள்ள நபரொருவரின் அடையாளத்தை உறுதிப்படுத்தும் ஆவணம்.       (………………………..) 

33. இலங்கையிலுள்ள பாடசாலைகளை நிருவகிக்கும் அமைச்சு     (………………………….)

34. இலங்கையின் தலைநகரம் அமைந்துள்ள மாகாணம்    (…………………….) 

35. உலக எயிட்ஸ் தினம்                           (…………………………)

36. வீண் செலவைத் தவிர்த்து பொருளைச் செட்டாகச் செலவு செய்வது.   (…………………….)

37. புதிய நியமனமொன்றை உறுதிப்படுத்தும் ஆவணம் (…………………….) 

38. வயலும் வயல் சார்ந்த இடமும்        (……………….)

39. பாடசாலையை விட்டு விலகும் மாணவர் ஒருவருக்கு வழங்கப்படும் ஆவணம்           (……………………) 

40. பிரதேச செயலாளர்களை மாவட்ட ரீதியாக நிருவகிக்கும் அதிகாரி         (……………………………..)

மொழித்திறன் வினாக்கள் தொடர் 2