வேலை வாய்ப்புக்களுக்காக நடாத்தப்படும் அனைத்து போட்டிப் பரீட்சைகளுக்கும் கற்கக்கூடிய வகையில் கடந்த காலங்களில் நடைபெற்ற போட்டிப் பரீட்சைகளில் இடம்பெற்ற வினாக்கள் உட்பட மொழித்திறன் வினாக்கள் தொடர் 4 கீழே தரப்பட்டுள்ளன.
01 தொடக்கம் 10 வரையுள்ள வினாக்களில் முதலில் தரப்பட்டுள்ள சொல்லுக்கு பொருத்தமான ஒத்தகருத்துச் சொற்கள் எதிரே தரப்பட்டுள்ளன. இவற்றுள் ஒரு சொல் பொருத்தமற்றது அச்சொல்லை தெரிவு செய்து அதற்கான இலக்கத்தினை எதிரேயுள்ள புள்ளிக்கோட்டில் எழுதுக.
01. பண்பு : (1) இயல்பு (2) தன்மை (3) கூர்மை (4) குணம் (………………)
02. சாகரம் : (1) நோக்கல் (2) சமுத்திரம் (3) கடல் (4) சிந்து (………………)
03. அடவி : (1) காடு (2) சிகரம் (3) கானகம் (4) வனம் (………………)
04. சமர் : (1) யுத்தம் (2) போர் (3) அமர் (4) தேசிகம் (………………)
05. அகம் : (1) உள்ளம் (2) சிந்தை (3) மனம் (4) கலை (………………)
06. சிகண்டி : (1) மயில் (2) கிரி (3) மஞ்சை (4) தோகை (………………)
07. மோகம் : (1) நொச்சி (2) மயக்கம் (3) பித்தம் (4) பிரமை (………………)
08. சினை : (1) முட்டை (2) கரு (3) மிகை (4) அண்டம் (………………)
09. களிறு : (1) பிடி (2) கரி (3) யானை (4) வேள்வி (………………)
10. சரணம் : (1) காலன் (2) கால் (3) தாள் (4) பாதம் (………………)
11 தொடக்கம் 20 வரையுள்ள வாக்கியங்களில் புள்ளிக்கோட்டில் இடம்பெற வேண்டிய 10 சொற்கள் வேறாக முதலில் தரப்பட்டுள்ளது. குறித்த ஒவ்வொரு வாக்கியத்திற்கும் இடையேயுள்ள புள்ளிக்கோட்டில் இடுவதற்கு பொருத்தமான விடையாக கருதக்கூடிய சொல்லினை தெரிவு செய்து புள்ளிக்கோட்டில் எழுதுக.
இடைநிலை, புறவினா, இடுகுறிப்பெயர், நேயம், மாத்திரை, கல், உயர்திணை, இடையினம், முக்காலி, சுட்டெழுத்து
11. உயர்ந்த குலமும், சிறந்த ஒழுக்கமும், பகுத்தறிவும் படைத்த உயிரினங்களை ……………………….. எனக் குறிப்பிடுவர்
12. ஒரு பொருளினை சுட்டிக்காட்ட வரும் எழுத்து ……………………….. எனப்படும்.
13. வினாவெழுத்து சொற்களுக்கு வெளியே அமைந்தால் அது ……………………….. எனப்படும்.
14. ய, ர, ல, வ, ழ, ள, எனும் எழுதுக்கள் ……………………….. எனப்படும்.
15. தொன்று தொட்டு காரணம் எதுவுமின்றி வருகின்ற பெயரானது ……………………… எனப்படும்.
16. ………………………………… என்பது ஒரு காரணப்பெயராகும்.
17. எழுத்துக்களின் ஒலி அளவினை குறித்து மற்றும் கண் இமைக்கும் அல்லது கை நொடி நேரம் ……………………… எனப்படும்.
18. ……………………… என்பது “வினைச் சொல்லின் காலங்காட்டும் ஓர் உறுப்பு” ஆகும்.
19. ……………………… என்பது பெயராகவும் வினையாகவும் அமையக்கூடிய சொல் ஆகும்.
20. ……………………… என்பது எழுத்துப்போலிக்கு உதாரணமாக கொள்ளக்கூடிய சொல் ஆகும்.
21 தொடக்கம் 30 வரையான வினாக்களுக்கு பொருத்தமான விடைகளை புள்ளிக்கோட்டில் எழுதுக.
21. தமிழிலுள்ள நெட்டெழுத்துக்களின் எண்ணிக்கையை குறிப்பிடுக? (………………..)
22. ஆய்த எழுத்தின் மாத்திரையை குறிப்பிடுக? (………………..)
23. மொழிக்கு முதலிலும் இறுதியிலும் வரும் வினா எழுத்தினை குறிப்பிடுக? (………………..)
24. நம்நாடு சிறந்த “வளநாடு” எனும் தகுதியைப் பெற்றுள்ளது. இதிலுள்ள “வளநாடு” என்பதை விரித்தெழுதுக. (………………..)
25. ஓடு + இன் + அ என்பதை சேர்த்தெழுதுக. (………………..)
26. குறில், நெடில் என உயிரெழுத்துக்கள் எதனடிப்படையில் பிரிக்கப்படுகின்றன (………………..)
27. நாட்குறிப்பு என்பதை பிரித்தெழுதுக. (………………..)
28. ஆண்பால், பெண்பால் உட்பட பால் எத்தனை வகைப்படும்? (………………..)
29. அகவினா என்பதால் விளங்கிக் கொள்வதென்ன? (………………..)
30. குறில் எழுத்துக்கான மாத்திரை அளவினைக் குறிப்பிடுக? (………………..)