முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர்கள் சேவை கடந்தகால வினாப்பத்திரங்கள் (Past Papers MSO)
முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர்கள் சேவை தரம் 11 உத்தியோகத்தர்களுக்கான வினைத்திறமைகாண் தடைப் பரீட்சைக்கான அலுவலக முறைமையும் நடைமுறையும் கடந்தகால வினாப்பத்திர வினாக்கள் Past Papers MSO II EB AR தொகுக்கப்பட்டு தமிழில் இத்தளத்தில் பதிவேற்றப்படுகின்றன.
முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர்கள் சேவை தரம் 11 உத்தியோகத்தர்களுக்கான வினைத்திறமைகாண் தடைப்பரீட்சைக்கான சகல பாடங்களுக்குமுரிய கடந்தகால வினாப்பத்திரங்களின் (Past Papers MSO) வினாக்கள் தொகுக்கப்பட்டு தமிழில் இத்தளத்தில் மேலும் பதிவேற்றப்படவுள்ளன..
கடந்த வருடங்களில் இலங்கை பரீட்சைகள் திணைக்களத்தினால் நடாத்தப்பட்ட முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர்கள் தரம் 11 க்கான வினைத்திறமைகாண் தடைப்பரீட்சையின் அலுவலக நடைமுறைகள் வினாப்பத்திரத்தின் 2ம் பகுதி வினாக்கள் அடங்கிய வினாப்பத்திர வினாக்கள் கீழே தரப்பட்டுள்ளன.. இதற்கான விடைகள் விரைவில் பதிவேற்றப்படவுள்ளன.
அரசாங்க முகாமைத்துவ உத்தியோகத்தர் சேவையின் தரம் 11 ஐச் சேர்ந்த உத்தியோகத்தர்களுக்கான வினைத்திறமைகாண் தடைப் பரீட்சை
அலுவலக முறைமையும் நடைமுறையும் – பகுதி 2
Efficiency Bar Examination for Officers in Grade II of Public Management Service Officers Service – Office System and Procedure – Part II
4 (I) பணியாட் குழுவினரை பயிற்றுவிப்பதன் மூலம் பெறக்கூடிய அனுகூலங்கள் யாவை?
6. தபால் என்பது பற்றி சுருக்கமான விபரணமொன்றை தந்து தபால் இற்கு பொறுப்பாகவுள்ள அலுவலரினாற் பின்பற்றப்பட வேண்டிய நடைமுறையை விளக்குக.
7. “பயனுறுதி வாய்ந்த அலுவலகக் குறிப்பொன்று உடனடியானதும் திருத்தமானதுமான தீர்மானங்களை எடுப்பதற்கு உதவுகின்றது” பயனுறுதி வாய்ந்த அலுவலகக் குறிப்பொன்றிலே சேர்க்கப்பட வேண்டிய அம்சங்களை குறிப்பிட்டு மேற்போந்த கூற்று பற்றிய உமது கருத்துக்களை கூறுக.
8. உமக்கு கிடைக்கப் பெற்ற கடிதம் தொடர்பாக பதவிநிலை உத்தியோகத்தரின் அறிவுறுத்தலுடன் அனுப்பப்பட வேண்டிய மறுமொழிக் கடிதம் தொடர்பில் நீர் பின்பற்ற வேண்டிய நடைமுறையை விளக்குக.
9. அலுவலகவேலையில் படிவங்களின் முக்கியத்துவம் யாது என்பது பற்றி சிறு விபரணமொன்று தந்து, தற்போது பயன்பாட்டிலுள்ள படிவமொன்றினைத் திருத்துவது தொடர்பாக கருத்திற் கொள்ளப்பட வேண்டிய காரணிகளை விளக்குக.