சகல போட்டிப்பரீட்சைகளுக்கும் (Competitive Exam) பொதுவான மொழித்திறன் வினாத்தாள் தொடர் 5 கீழே தரப்பட்டுள்ளது. இதற்கான விடைகள் வேறாக தரப்பட்டுள்ளன
01 தொடக்கம் 10 வரை தரப்பட்டுள்ள சொற்களுக்கான எதிர்க்கருத்து சொற்களை புள்ளிக்கோட்டில் எழுதுக.
01. நகரம் (………………)
06. மேதை (………………)
02. தன்மை (………………)
07. மேன்மை (………………)
03. விருப்பு (………………)
08. குடியரசு (………………)
04. அண்மை (………………)
09. சொந்தம் (………………)
05. மென்சொல் (………………)
10. பழமொழி (………………)
11 தொடக்கம் 20 வரையான வினாக்களில் ஒவ்வொரு வினாவுக்கும் நான்கு விடைகள் தரப்பட்டுள்ளன. குறித்த வினாவுக்கு பொருத்தமான விடையை தெரிவு செய்து அதற்குரிய இலக்கத்தை எதிரேயுள்ள புள்ளிக்கோட்டில் எழுதுக.
11. க, ஞ, ண, ம, என்னும் எழுத்துக்களிற்கான மாத்திரை அளவு யாது?
(1) மாத்திரை 2 (2) மாத்திரை 1/2 (3) மாத்திரை 1 (4) மாத்திரை 1/4 (……………)
12. “ஆற்றோடு ஆற்று நீர் அலைந்து வருமாப்போல்” எனும் பாடல் வரியில் உள்ள “நீர்” என்னும் சொல்லின் பொருள்.
(1) அசலம் (2) செந்நீர் (3) ஆர்ப்பு (4) புனல் (……………)
13. அறிஞர் கூட்டம் அவை எனப்படுவது போல் புற்களின் கூட்டம்.
(1) திரள் (2) கற்றை (3) மஞ்சரி (4) செண்டு (……………)
14. “இலங்கைக்கு வடக்கே இந்தியா இருக்கிறது” எனும் வாக்கியத்தில் உள்ள வேற்றுமை எண் மற்றும் வாக்கியத்தின் பொருள் யாது?
(1) நான்காம் வேற்றுமை, எல்லைப் பொருள்
(2) இரண்டாம் வேற்றுமை, ஓர் இடம்நோக்கி நகர்தல்
(3) முதலாம் வேற்றுமை, எல்லைப் பொருள்
(4) நான்காம் வேற்றுமை, ஓர் இடம் நோக்கி நகர்தல் (……………….)
15. நூலாசிரியர் தமது நூலைப்பற்றி நூல் முகப்பில் எழுதும் உரை,
(1) அணிந்துரை (2) நூன்முகம் (3) நன்றியுரை (4) பதிப்புரை (……………)
16. “கேண்மை” என்பதன் எதிர்ச்சொல்.
(1) தோழமை (2) கேள்வர் (3) சினேகிதம் (4) இகல் (……………)
17. உலக நடையறிந்து ஒழுகுதல்,
(1) ஓம்படை (2) ஒப்புரவு (3) ஒத்துப்போதல் (4) ஓலக்கம் (……………)
18. 30 வது ஆண்டு நிறைவு விழா,
(1) வெள்ளிவிழா (2) நூற்றாண்டு விழா (3) பொன்விழா (4) முத்து விழா (……………)
19. “பறவைகள் பறந்தது” இதிலுள்ள வழுநிலை
(1) மரபுவழு (2) காலவழு (3) எண்வழு (4) வினாவழு (……………)
20. ஈவு இரக்கம் என்பது,
(1) இணைமொழி (2) அடுக்கு தொடர் (3) அடுக்கிடுக்கு தொடர் (4) இரட்டை கிழவி (……………)
21 தொடக்கம் 30 வரையான வாக்கியங்களில் உள்ள புள்ளிக்கோட்டில் வரவேண்டிய சொல்லினை அடைப்புக்குறிக்குள் உள்ள சொற்களிலிருந்து தெரிவு செய்து புள்ளிக்கோட்டில் எழுதுக.
21. இலங்கையின் புகையிரத சேவைகள் அனைத்தும் ……………………………………… ஆரம்பிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. (கடந்த மாதம் / அடுத்த மாதம்)
22. மாணவர்களுக்கான சீருடைகள் வழங்குவதற்கான ……………….. இன்று நடைபெற்றது. (நிகழ்வு / நிகழ்வுகள்)
23. மீன்பிடித்துறையின் மேம்பாட்டுக்காக அரசாங்கம் பத்து மில்லியன் ரூபாவினை ………………………………………….. (ஒதுக்கியுள்ளது / ஒதுக்கியுள்ளார்கள்)
24. அரச ஊழியர்கள் சங்கம் சம்பளக் ………………………………….. முன்வைத்து வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டது. (கொடுப்பனவை / கோரிக்கையை)
25. வைரஸ் தடுப்பு வேலைத்திட்டங்களில் பயிற்சி பட்டதாரிகளும் ………………………. கொண்டனர். (இணைந்து / விலகி)
26. பல்லாயிரம் வருடங்களுக்கு …………………………… வாழ்ந்த உயிரினங்களின் எச்சங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. (பின்னர் / முன்னர்)
27. தொழில் …………………………….. கடைப்பிடிக்காத தனியார் நிறுவனங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படவுள்ளன. (நிவாரணங்களை / சட்டங்களை)
28. சகல பாடசாலைகளுக்கும் ………………. வழங்கப்பட்டன. (கணினிகள் / கணணிகள்)
29. நியமனம் கிடைத்த அனைவரும் தங்களது …………………………… உறுதிப்படுத்த வேண்டும். (ஆளடையாளத்தை / கடிதத்தை)
30. மேலதிகாரியின் முறையான …………………………. அமைய செயற்பட வேண்டும். (சொல்லுக்கு / கட்டளைக்கு)