கடந்த காலங்களில் இடம்பெற்ற போட்டிப் பரீட்சைகளிலிருந்து பெறப்பட்ட மொழித்திறன் வினாக்கள் Language Proficiency தொடர் 3
01 தொடக்கம் 10 வரையுள்ள ஒவ்வொரு வினாவிலும் தரப்பட்டுள்ள சொல் வரிசை ஒவ்வொன்றிலும் பொருத்தமற்ற சொல்லைத் தெரிவு செய்து அதற்குரிய இலக்கத்தை வினாவின் எதிரேயுள்ள புள்ளிக்கோட்டின் மீது எழுதுக.
01. (1) புன்னகை (2) சிரிப்பு (3) வெய்யோன் (4) நகைப்பு (………………………….)
02. (1) அருக்கன் (2) ஆளி (3) கேசரி (4) சிங்கம் (………………………….)
03. (1) மொழி (2) கருத்து (3) சொல் (4) வாக்கு (………………………….)
04. (1) புனிதம் (2) தூய்மை (3) சுத்தம் (4) வாய்மை (………………………….)
05. (1) கேண்மை (2) சிநேகம் (3) நேயம் (4) நட்பு (………………………….)
06. (1) தனம் (2) ஆற்றல் (3) அறிவு (4) ஞானம் (………………………….)
07. (1) வாவி (2) ஏரி (3) தாமரை (4) தடாகம் (………………………….)
08. (1) துதித்தல் (2) புகழ்தல் (3) போற்றல் (4) தூற்றல் (………………………….)
09. (1) நலம் (2) நயம் (3) நன்மை (4) நன்றி (………………………….)
10. (1) பால் (2) மது (3) கள் (4) நறவு (………………………….)
11 தொடக்கம் 20 வரையான ஒவ்வொரு வினாவிலும் தரப்பட்டுள்ள சொல்வரிசை ஒவ்வொன்றிலும் சரியாக எழுத்துக் கூட்டப்படாத சொல்லைத் தெரிவு செய்து அதற்குரிய இலக்கத்தினை வினாவின் எதிரேயுள்ள புள்ளிக்கோட்டின் மீது எழுதுக.
11. (1) கடல்கரை (2) காசோலை (3) பழமுதிர்சோலை (4) கடன்காரன் (…………………)
12. (1) மலைச்சாரல் (2) சுகந்தம் (3) ஆரோகணம் (4) பளிவாங்கல் (…………………)
13. (1) பலவினம் (2) மடிக்கணினி (3) பந்தோபஸ்து (4) பணியிடை (…………………)
14. (1) கழகம் (2) படிக்கதவன் (3) பல்லாங்குழி (4) பதக்கம் (…………………)
15. (1) பற்றுறுதி (2) காலகட்டம் (3) குளவிக்கூடு (4) சாத்திரம் (…………………)
16. (1) கழநிலவரம் (2) பழந்தோட்டம் (3) மழைவீழ்ச்சி (4) வன்முறை (…………………)
17. (1) திணைக்கழம் (2) போக்குவரத்து (3) விலைக்கழிவு (4) வதனம் (…………………)
18. (1) குழுவேலை (2) மறுமொளி (3) கதிர்வேலன் (4) காசேடு (…………………)
19. (1) மந்தகதி (2) கண்காச்சி (3) பதநீர் (4) குலவிளக்கு (…………………)
20. (1) பட்டிமண்றம் (2) திருத்தலம் (3) பழச்சாறு (4) அருக்கண் (…………………)
21 தொடக்கம் 30 வரையான வினாக்களில்முதலில் தரப்பட்டுள்ள சொல்லுடன் ஏதோ ஒரு வகையில் தொடர்பாக உள்ள சொற்கள் அச்சொல்லுக்கு நேரே தரப்பட்டுள்ளன. அச்சொற்களில் ஒரு சொல் பொருத்தமற்றது. அச்சொல்லின் இலக்கத்தை எதிரேயுள்ள புள்ளிக்கோட்டில் எழுதுக.
21. ஜனனம் : (1) பிறப்பு (2) ஜென்மம் (3) மறைவு (4) உற்பத்தி (……………….)
22. தரணி : (1) அகிலம் (2) வைகுண்டம் (3) புவி (4) வையகம் (……………….)
23. கருவூலம் : (1) கஜானா (2) பொக்கிசம் (3) குவலயம் (4) களஞ்சியம் (……………….)
24. மஞ்சரி : (1) கலை (2) சரம் (3) மாலை (4) அணி (……………….)
25. மனம் : (1) அகம் (2) உள்ளம் (3) சித்தம் (4) புறம் (……………….)
26. அருந்தல்: (1) கலத்தல் (2) புசித்தல் (3) சுவைத்தல் (4) உண்ணல் (……………….)
27. களங்கம்: (1) குற்றம் (2) வசை (3) கறை (4) சிறை (……………….)
28. வனிதை: (1) தூரிகை (2) பூவை (3) கோதை (4) காரிகை (……………….)
29. சமுதாயம் : (1) கூட்டம் (2) குழாம் (3) தீர்மானம் (4) சமூகம் (……………….)
30. திங்கள் : (1) மதி (2) குழாம் (3) சந்திரன் (4) அம்புலி (……………….)