இலங்கையின் அரச நிறுவனங்களில் நடைமுறையிலுள்ள நிதி நடைமுறைகள் சகல அரச உத்தியோகத்தர்களும் கற்றுக்கொள்ளக்கூடிய வகையில் தொடராக இங்கு தரப்படுகின்றது. அரச அலுவலர்களுக்கான திணைக்களப் பரீட்சைகளுக்கு பொருத்தமானது.
அரச அலுவலர்களுக்கான நிதி ஒழுங்கு விதிகள் 08 – வரவுசெலவுத்திட்ட வகுப்பீட்டு அலகுகள் :
FR – 8 – Units of Budgetary Classification
1. தலைப்பு – Head
ஒவ்வொரு திணைக்களத்துக்கும், அமைச்சரவை அமைச்சுக்கும் செலவினத் தலைப்பு ஒன்று குறித்தொதுக்கப்படுகிறது. கூட்டுத்தாபனத்துக்கான ஏற்பாடு அமைச்சின் தலைப்பின் கீழ் செய்யப்படுகிறது. தலைப்பு ஒரு ஒதுக்கீட்டு அலகு ஆகும். அது அதிகார வரிசையையும் வகைகூறற் பொறுப்பையும் சுட்டிக்காட்டிகிறது. செலவினத்தலைப்புக்களாக வகுப்பீடு செய்வது நிருவாக ஒழுங்கு அமைப்பினை அடிப்படையாக கொண்டுள்ளது.
அத்தலைப்புகள் ஏதாவது ஒரு அமைச்சின் கீழ் தொகுமப்படுத்தப்பட்டிருக்காத திணைக்களங்களின் செலவினத்தலைப்புக்கள் தவிர, அமைச்சுக்களின் தொகுதியாக அமைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு தலைப்புக்கும் அடையாள இலக்கம் ஒன்றும் கொடுக்கப்பட்டுள்ளது.
2. நிகழ்ச்சித்திட்டம் – Programme
(i) நிகழ்ச்சித்திட்டமானது ஒதுக்கீட்டின் ஒரு நடைமுறை சார்ந்த ஓர் அலகு ஆகும். நிகழ்ச்சித்திட்டங்கள் ஒவ்வொரு திணைக்களமும் அதன் குறிக்கோள்களை எய்துவதற்காக நிறைவேற்றும் பணிகளை நிரல்படுத்துவதற்கு உதவும் வகையில் வகுத்தமைக்கப்படுதல் வேண்டும்.
(ii) நிகழ்ச்சித்திட்டம் 1 பொது நிருவாகத்துக்கு ஒதுக்கப்பட்டு உள்ளது. அது தாபனத்தை நடாத்துவதற்கான செலவினத்துக்கும், தாபனம் ஆற்றும் சேவைகளுக்குரிய செலவினத்துக்கும் இடையிலான வேறுபாட்டைக் காட்டுவதற்காக நியமப்படுத்தப்பட்டுள்ளது.
Programme I is reserved for General Administration and is standardized in order to show the distinction between the expenditure for running the establishment and the expenditure for the service rendered by the establishment.
3. கருத்திட்டம் – Project
கருத்திட்டம் நிகழ்ச்சித் திட்டத்தின் ஓர் உப பகுதி ஆகும். அது ஒரு முயற்சியை அல்லது ஒரே வகை முயற்சிகளின் தொகுதி ஒன்றைக் குறிக்கின்றது. அது ஒவ்வொரு முயற்சியினதும் ஆகு செலவைக் கணிக்க உதவுவதோடு அம்முயற்சியின் இடுகை, பெறுகைத் தரவுகளை மதிப்பிடுவதற்கும் உதவுகின்றது.
மீண்டுவரும் செலவின கருத்திட்டங்கள் இலக்கம் 1 இல் இருந்து ஆரம்பித்து அடுத்துவரும் இலக்கங்களின் ஒழுங்கில் இலக்கமிடப்பட்டுள்ளன. மூலதன கருத்திட்டங்கள் இலக்கம் 101 இல் இருந்து ஆரம்பித்து அடுத்துவரும் இலக்கங்களின் ஒழுங்கில் இலக்கமிடப்பட்டுள்ளன. முதல் மூன்று மூலதன கருத்திட்டங்கள் பின் வருமாறு நியமப்படுத்தப்பட்டுள்ளன.
101 – மூலதனச் சொத்துக்களின் புனரமைப்பும் மேம்படுத்தலும்
102 – உபகரணங்கொள்ளல்
103 – கட்டிடங்கள் நிருமாணித்தல்
101 – Rehabilitation and Improvement of Capital Assets
102 – Acquisition of Equipment
103 – Construction of Buildings
4. செலவு விடயங்கள் Objects
(i) செலவு விடயமானது கருத்திட்டம் ஒன்றின் பொருளியல் அமைவுக்கூறு ஆகும். செலவு விடயங்கள், மூலதனச்செலவினம், மீண்டுவருஞ் செலவின வேறுபாட்டைப் பேணும் அதேவேளையில் மேல் வாரியான வகுதிகளாக தொகுக்கப்பட்டுள்ளன. மீண்டுவருஞ் செலவின விடயங்களில் ஏழு வகுதிகளும், மூலதனச் செலவின விடயங்களில் ஏழு வகுதிகளும் உள்ளன. செலவு விடயங்கள் நான்கு இலக்க எண்கள் கொண்டு குறியீடிடப்பட்டுள்ளன. முதலாவது இரண்டு இலக்கங்களும் பொருளியல் வகுதிகளைக் குறிப்பிடுகின்றன. (பின்னிணைப்பு I ஐப் பார்க்க)
செலவு விடயங்களுக்கு குறியீடிடல், அவற்றின் வாசகங்கள் ஆகியன நியமப்படுத்தப்பட்டுள்ளன. அவை மாற்றப்படலாகாது.
(ii) மீண்டுவருஞ் செலவின விடயங்களின் பொருளியல் வகுதிகள் வருமாறு :
1. ஆளுக்குரிய வேதனாதிகள் Personal Emoluments
2. பிரயாணச் செலவுகள் Travelling Expenses
3. வழங்கல்கள் Supplies
4. ஒப்பந்த சேவைகள் Contractual Services
5. நடைமுறை மாற்றங்கள் Current Transfers
6. நடைமுறை மானியங்கள் Current Grants
7. பிற நடைமுறைச் செலவுகள் Other Recurrent Expenses
(iii) மூலதனச் செலவின விடயங்களின் பொருளியல் வகுதிகள் வருமாறு :
1. உபகரணச் செலவீடு, காணிச்சீர்திருத்தம், கட்டமைப்புச் செலவீடு Equipment Outlay, Land Improvements and Structures Outlay
2. மூலதன மாற்றம் உதவிப்பணம் Capital Transfers and Subsidies
3. மூலதன மானியம் Capital Grants
4. நிதிச் சொத்துக்கள் Financial Assets
5. முற்கொடுப்பனவுகள் Repayments
6. மூலதனச் சொத்துக்களின் மறுசீரமைப்பு, மேம்படுத்தல் Rehabilitation and Improvement of Capital Assets
5. செலவு விடய வகுப்பு Object Class
(i) கணக்கீட்டின் மிகச் சிறிய அலகு செலவு விடய வகுப்பு ஆகும்.
(ii) நியமப்படுத்திய செலவு விடய வகுப்பு ஒன்று பல தொடர்புற்ற முயற்சிகளுக்கு ஏற்பாடு செய்யும்போதும், ஒவ்வொரு முயற்சியினதும் தன்மை, ஆகுசெலவு ஆகியன பாராளுமன்றத்துக்கு அறிவிக்கப்பட வேண்டியது விரும்பத்தக்கதாக இருக்கும் போதும், செலவு விடய வகுப்பானது அடுத்துறும் இலக்கமிட்ட விடயங்களாக பிரிக்கப்படுகின்றது. இந்த ஒழுங்குவிதியின் நியதிகளின்படி தனியான கணக்குகள் பேணப்படும் விடயங்கள் இதனகத்து இனிமேல் “கட்டுப்படுத்திய விடயங்கள்” (Controlled Items) ஆக குறிப்பீடு செய்யப்படும். ஏதேனும் பிற விடயங்கள் மீதான செலவினத்துக்கு தனியான கணக்குகள் பேணுவது, திணைக்கள நோக்கங்களுக்குக் கைக்கொள்ள வேண்டிய கட்டுப்பாட்டின் அளவைப் பொறுத்துள்ளது. அதனை மதிப்பீடுகளில் காட்ட வேண்டிய தேவை இல்லை.
06. செலவு விடய வகுப்புக்களின் நிதியளிப்பு விபரங்கள். Financial Details of Object Classes
ஒவ்வொரு செலவு விடயத்தினதும் கீழான செலவினம் பின்வரும் கணக்குகளின் கீழ் கணக்கிடப்படுவதுடன் பின்வரும் நிதியளிப்பு விபரங்கள் வழியில் மதிப்பீடுகளில் காட்டப்படுகின்றது. இவ்வகுப்பீட்டின் நோக்கம் நிதியளிப்பு மூலத்தையும் வழிகளையும் இனங்காண்பதுடன் வள ஒதுக்கீட்டின் முறைமையில் அமைந்த கணக்கீட்டுக்கு உதவுவதும் ஆகும்.
ஒதுக்கீட்டுச் சட்டம் – (வழங்கல் சேவைகள்) Appropriation Low – (Supply Services)
(11) திரட்டிய நிதியப் பொதுக்கணக்கு Consolidated Fund General Account
(12) வெளிநாட்டு உதவிக்கடன் Foreign Aid Loans
(13) வெளிநாட்டு உதவி மானியம் Foreign Aid Grants
(14) மீள நிரப்பத்தக்க வெளிநாட்டு உதவிக்கடன் Reimbursable Foreign Aid Loans
(15) மீள நிரப்பத்தக்க வெளிநாட்டு உதவி மானியம் Reimbursable Foreign Aid Grants
(16) நேரொத்த நிதியம் Counterpart Funds
விசேட சட்டம் Special Low – (21) திரட்டிய நிதியப் பொதுக்கணக்கு
சகல சந்தர்ப்பங்களிலும் சட்டம் அல்லது உடன்படிக்கைக்கான மூலமும் தொடர்பும் காட்டப்படுதல் வேண்டும்.
சகல போட்டிப் போட்டிப் பரீட்சைகளுக்கும் பொருத்தமான அரச அலுவலர்களுக்கான நிதி ஒழுங்கு விதிகளை தொடர்ச்சியாக இத்தளத்தில் கற்றுகொள்ளுங்கள்