Teaching

Sunday, October 11, 2020

நிதி நடைமுறைகள் (FR) 11-14 Estimation, Miscellaneous, Token Provision

நிதி நடைமுறைகள் Financial Regulation 11 -14 Estimation of Other Recurrent Expenditure, Estimation of Capital Expenditure, Miscellaneous Service, and Token Provision  



நி.ஒ – 11, பிற மீண்டுவருஞ் செலவினத்தை மதிப்பிடல், 

Expenditure of Other Recurrent Expenditure (1) பிரயாணச் செலவுகள் Travelling Expenses

இந்த செலவு விடயத் தொகுதியின் ஏதாவது அதிகரிப்பு நாடப்பட்டால் அதற்கான சூழ்நிலைகள் முழுமையாக நாடப்படுதல் வேண்டும். வழக்கமாக வரவு செலவுத்திட்ட ஆண்டுக்கு புதிய பதவியினர் அங்கீகரிக்கப்படும் போது அல்லது புதிய முயற்சிகள் அனுமதிக்கப்படும்போது தவிர, அதிகரிப்பு எதுவும் அனுமதிக்கப்பட மாட்டாது. செலவுகளின் கணிப்பீடு, கூற்றுக்கான பின்னிணைப்பு ஒன்றின் மூலம் விரிவாக காட்டப்படுதல் வேண்டும். அப்போதுதான் அதிகரிப்புக்கான காரணங்களை நுனித்தாய்வு செய்து அறிவது சாத்தியமாகும். 

இச்செலவின விடயத் தொகுதியானது பதவியினர் செலவுகளுக்கு அடுத்தபடியான முக்கியத்துவம் பெறுகின்றது. இதனைக் கணிக்கையில் அதிக கவனம் செலுத்தப்படுதல் வேண்டும். முன்னர் குறிப்பிட்டவாறு சிக்கன நடவடிக்கைகள் எடுக்கப்படுதல் வேண்டும். அத்துடன் சிக்கனப் போக்கினைக் கருத்திற் கொண்டு விரயமுள்ள முறைகள் நீக்கப்படுதல் வேண்டும். பகுப்பாய்வு நோக்கங்கள் பொருட்டு இச்செலவு விடயத் தொகுதியின் கீழ் நாடப்படும் ஏற்பாட்டினது விரிவான கூறாய்வு காட்டப்படுதல் வேண்டும். அதிகரிப்புக்கள் நாடப்பட்டால் அவை அதிகரித்த முயற்சி மட்டங்களுடனும் விளைவு அதிகரிப்புகளுடனும் ஒன்றுபடுத்தப்படுதல் வேண்டும். 

(3) ஒப்பந்த சேவைகள் Contractual Services 

ஈண்டும் சிக்கன நடவடிக்கைகள் மிக்க கவனமாக பிரயோகிக்கப்படல் வேண்டும். இத்தொகுதியின் கீழ் வரும் செலவின விடயங்களின் விரிவான கூறாய்வு ஒன்று படிவம் ‘அ’ இற்குப் பின்னிணைப்பாகத் தரப்படுதல் வேண்டும். அதிகரிப்புக்கள் நாடப்பட்டால் அத்தகைய அதிகரிப்புக்களுக்கான நியாயங்கள் முழுமையாக விளக்கப்படுதல் வேண்டும். 

(4) நடைமுறை மாற்றங்கள், நடைமுறை மானியங்கள், மற்றும் மீண்டுவரும் செலவுகள் Current Transfers, Current Grants, Other Recurrent Expenses 

இத்தொகுதிகளின் செலவு விடயம் ஒவ்வொந்றின் கீழும் நாடப்படும் ஏற்பாடுகளின் விரிவான பகுப்பாய்வினைக் காட்டும் கூற்று அனுப்பப்படுதல் வேண்டும். ஏற்பாடுகளின் கணிப்பு கொள்கைப் பணிப்புரைகள், நியதிச்சட்ட கடப்பாடுகளை அடிப்படையாகக் கொண்டிருத்தல் வேண்டும். 

இக்கூற்றுக்கள் அத்தகைய அங்கீகாரங்கள், தேவைகளினால் ஆதாரப்படுத்தப்படல் வேண்டும். உதாரணமாக மாகாண சபைகளுக்கான மானியங்கள் விடயத்தில் நிதி ஆணைக்குழுவின் அங்கீகாரம் அனுப்பப்படுதல் வேண்டும். 

நி. ஒ. 12. மூலதனச் செலவினத்தை மதிப்பிடுதல் – Estimation of Capital Expenditure  (1) மூலதனச் சொத்துக்களின் புனரமைப்பு மற்றும் மேம்படுத்தல்  Rehabilitation and Improvement of Capital Assets.

புனரமைத்தலின் அல்லது மேம்படுத்தலின் தன்மையும் புனரமைத்தலுக்கான அல்லது மேம்படுத்தலுக்கான தேவையும் முழுமையாக விளக்கப்படுதல் வேண்டும். வாகனங்கள், உபகரணங்கள், சம்பந்தப்படும்போது அவற்றின் வயது அமைப்பு சமர்ப்பிக்கப்படுதல் வேண்டும். இத்தொகுதியின் கீழான செலவு விடயம் ஒவ்வொன்றினதும் மதிப்பீட்டுச் செலவு குறிப்பிடப்படுதல் வேண்டும். 

(2) உபகரணச் செலவீடு, காணி, காணிச்சீர்திருத்தம், கட்டமைப்புச் செலவீடு.

Equipment outlay, Land, land Improvement and structures outlay

இச்செலவின விடயத்தின் பேரில் அதிகரிப்பு ஒன்றை நாடினால் அதிகரிப்புக்கான தேவை விளக்கப்படுதல் வேண்டும். உ-ம்: ஆட்களின் எண்ணிக்கையை அதிகரித்து அதனால் தளபாடத் தேவைகளை அதிகரிப்பதன் வாயிலா, அல்லது பல்வேறு உபகரணங்களைப் பயன்படுத்தும் முயற்சிகளின் மட்டத்தில் அதிகரிப்பு இருந்துள்ளதா, அல்லது பதிலீடு செய்வதற்கா? போன்ற கேள்விகள் விளக்கக் குறிப்புக்கள் மூலம் தழுவப்படுதல் வேண்டும். 

உபகரணங்கள் குறித்தவொரு கருத்திட்டத்துக்கானவையாக இருந்தால் அவை அந்த கருத்திட்டத்தின் கீழ் ஏற்பாடு செய்யப்பட்டனவா, குறித்த கருத்திட்டங்களின் தேவையை கிடைக்கப்பெறும் பொறிச்சாதனங்கள், உபகரணங்கள் Equipment, வாகனங்கள் Vehicle, கட்டிடங்கள் Building, கட்டமைப்புக்கள் போன்றவற்றைக் கொண்டு ஈடு செய்ய இயலாதா, கருத்திட்டம் முடிவுற்ற பின் அத்தகைய மூலதனச் சொத்துக்களை என்ன செய்ய உத்தேசிக்கப்பட்டுள்ளது போன்றவை குறிப்பிடப்படுதல் வேண்டும். 

(3) நிருமாண மற்றும் அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் – Contractual Services

ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டு வரவு செலவுத்திட்ட ஆண்டில் தொடரப்பட்டுள்ளனவும் மொத்தச் செலவு மதிப்பீட்டைக் கொண்டுள்ளனவுமான கருத்திட்டங்கள் தொடர்புற்ற விபரங்கள் விளக்கக் குறிப்புகளுடன் ஆண்டு மதிப்பீடுகளிற் சேர்ப்பதற்காக தேசிய வரவு செலவுத்திட்ட திணைக்களத்துக்கு அனுப்பி வைக்கப்படுதல் வேண்டும். முறைப்படி அங்கீகரிக்கப்பட்ட புதிய கருத்திட்டங்கள் தொடர்புற்ற விபரங்களும் விளக்கக் குறிகளுடன், கருத்திட்ட அறிக்கைகள், நிதியளிப்பு உடன்படிக்கைகள், செயற்படுத்தல் நிகழ்ச்சித்திட்டங்கள் போன்ற கருத்திட்ட ஆவணங்களின் தொடர்புகளுடன் அனுப்பப்படுதல் வேண்டும். (நி.ஒ. 3ஐப் பார்க்க)

அரசாங்க திணைக்களுக்கான காணி, கட்டிடங்களின் கொள்கைகள் யாவற்றுக்கும் காணி விடயத்துக்கு பொறுப்பான அமைச்சின் மதிப்பீடுகளில் மொத்த ஏற்பாடு செய்யப்படுகிறது. வழக்கமாக காணி, கட்டிடங்களின் கொள்வனவுக்கு ஏனைய அரசாங்க அமைச்சுக்கள், திணைக்களங்களின் கீழ் ஏற்பாடு செய்யப்படுவதில்லை. 

நி.ஒ. 13. நானாவித சேவைகள் – Miscellaneous Services

குறித்தவொரு திணைக்களத்தின் கீழ் நேரடிச் செலவுகளாக பொருத்தமாக ஏற்பாடு செய்யமுடியாத விசேட தன்மை வாய்ந்த சேவைகளுக்கான நிதி ஏற்பாடு, திறைசேரியின் தேசிய வரவு செலவுத்திட்டப் பணிப்பாளர் அதிபதியினால் கட்டுப் படுத்தப் பெற்றுத் தொழிற்படுத்தப்படும் “நானாவித சேவைகள்” தலைப்பின் கீழ் செய்யப்படுகிறது. 

நி.ஒ. 14. அடையாள ஏற்பாடு – Token Provision

அடையாள ஏற்பாடு ஏதுவாவது தேசிய வரவுசெலவுத்திட்டப் பணிப்பாளர் அதிபதியினது குறித்த அங்கீகாரத்துடன் மிக்க விசேட சூழ்நிலைகளின் கீழ் அல்லாமல் ஆண்டு மதிப்பீடுகளில் சேர்த்து கொள்ளப்படக்கூடாது.