Teaching

Thursday, October 1, 2020

FR6 7 அரச நிதி நடைமுறைகள்



FR6 7

கடந்த தொடர்களில் அரச நிதி நடைமுறைகள் இலக்கம் 05 வரை பதிவேற்றப்பட்டுள்ளது. அரச நிதி நடைமுறை விதிகள் சகல அரச ஊழியர்களுக்குமான பரீட்சைகளுக்கும் பொதுவான பாடமாகையினால் இலவசமாகவும், இலகுவாகவும் மற்றும் விரைவாகவும் கற்றுக் கொள்ளக் கூடிய வகையில் இத்தளத்தில் பதிவேற்றப்படுகின்றது. 

நிதி ஒழுங்கு விதிகள் – பிரிவு 2

ஆண்டு மதிப்பீடுகளை சமர்ப்பிப்பதற்கான அமைப்பு

Form of Presentation of Annual Estimates

நி.ஒ – 06 வெளியீடுகள் Publications – FR6 

(1) நிதியாண்டுக்குரிய அரசாங்கத்தின் வருவாய், செலவின மதிப்பீடுகள். Estimate of Revenue and Expenditure of Government for the Financial year shall

(அ) வருவாய் மதிப்பீடுகள்;

(ஆ) செலவினத்தின் பொது மதிப்பீடுகள் ;

(இ) முற்பணக் கணக்குகள் தொடர்புற்ற மதிப்பீடுகள் :

(ஈ) அரசாங்க சேவையின் வேதன அளவுத்திட்டங்கள் :

ஆகியவற்றை அடக்கும்.

(2) விரிவான பதவியினர் அட்டவணை Detailed Staff Schedule 


இது தனியாக வெளியிடப்படும். அத்துடன் இது ஒவ்வொரு செலவின நிகழ்ச்சித் திட்டத்திலும் ஒவ்வொரு கருத்திட்டத்தின் கீழ் தொகுதி ‘ஆ’ – பதவி நிலை உத்தியோகத்தர்கள், தொகுதி ‘இ’ – உபநிலை உத்தியோகத்தர்கள்; தொகுதி ‘ஈ’ – சிறு தர உத்தியோகத்தர்கள், ஆகியவற்றில் உள்ள பதவியணிகள் யாவும் தொடர்புற்ற தகவல்களை அடக்குகின்றது. இவ்வட்டவணையில் பின்வருவன அடக்கப்படுதல் வேண்டும்:

(அ) உத்தியோகத்தர்களின் தொகுதியும் பதவிகளும்,

(ஆ) வேதன அளவுத்திட்டம்,

(இ) முன்னைய ஆண்டின் இறுதியில் இருந்த நிரந்தர / தற்காலிக அல்லது அமய உத்தியோகத்தர்களது உண்மையான எண்ணிக்கை, ஆண்டின் போது செலுத்திய மொத்த வேதனம் ; 

(ஈ) நடப்பு ஆண்டுக்குரிய நிரந்தர / தற்காலிக அல்லது அமைய உத்தியோகத்தர்களது மதிப்பீட்டு எண்ணிக்கையும் வேதனமும் ; 

(உ) எதிர்வரும் ஆண்டுக்குரிய நிரந்தர / தற்காலிக அல்லது அமைய உத்தியோகத்தர்களது மதிப்பீட்டு எண்ணிக்கையும் வேதனமும் ;  

(3) வருமான, செலவினப் பொழிப்பு Summary of Income and Expenditure 


இது, விரிவான வருவாய், செலவின மதிப்பீடுகளுக்கு மேலதிகமாக வெளியிடப்படுகின்றது. இதில் அரசாங்க பெறுகைகளின் பொழிப்பு, முன்னைய ஆண்டுக்குரிய அரசாங்கத்தின் உண்மையான செலவினத்தின் பொழிப்பு Summary of Expenditure, நடப்பு ஆண்டுக்கும் வரவு செலவுத்திட்ட ஆண்டுக்கும் உரிய செலவின மதிப்பீடுகள் ஆகியவற்றை அடக்குகின்றது. 

செலவினத் தொகைகள், நிகழ்ச்சித்திட்டம், கருத்திட்டம், என்பன மூலம் காட்டப்படுகின்றது. மேலும் திணைக்களங்கள், பணிகள், பொருளியல் வரிசை விடயங்கள் வாரியான செலவினத்தின் பொழிப்பும் இந்த வெளியீட்டில் அடக்கப்படுகின்றது. 

(4) செலவின மதிப்பீடுகளின் அமைப்பு Form of Estimates of Expenditure 

ஆண்டு ஒதுக்கீட்டுச் சட்டத்துடன் பின்னிணைப்பாக வெளியிடப் பெறும் செலவின மதிப்பீடுகள் பின்வருவனவற்றைக் கொண்டுள்ளன.

(அ) பகுதி I – பொது மதிப்பீடுகள். 

பொது மதிப்பீடுகள் ஒதுக்கீட்டுச் சட்டத்தின் 1ம் அட்டவணையின் கீழ் செய்யப்படும் வரவு செலவுத்திட்ட ஏற்பாடுகளையும் விசேட சட்டங்களின் கீழான ஆண்டு ஒதுக்கீடுகளையும் கொண்டுள்ளன. 

(ஆ) பகுதி II – முற்பணக்கணக்கு முயற்சிகள்;

இந்தப் பகுதி ஒதுக்கீட்டுச் சட்டத்தின் இரண்டாம் அட்டவணையிற் குறிப்பிட்டவாறு முற்பணக் கணக்கு முயற்சிகளையும் அம்முயற்சிகளுக்கென அங்கீகரிக்கப்பட்ட எல்லைகளையும் அடக்குகின்றது.

(இ) பகுதி III – வேதன அளவுத்திட்டங்கள் ;

இப்பகுதியானது அரசாங்க சேவையின் வேதன அளவுத்திட்டங்களை அமைத்துத் தருவதுடன் பொது மதிப்பீடுகளுக்கான ஆதரவு அட்டவணையாகவும் அமைகின்றது. 


நி.ஒ. 7. பொது மதிப்பீடுகள் General Estimates

(1) பொதுச் செலவின மதிப்பீடுகள் தலைப்புக்கள், நிகழ்ச்சித்திட்டங்கள், கருத்திட்டங்கள், செலவு விடயங்கள், நிதியளிப்பு விபரங்கள் என்ற நியதிகளில் வகுப்பீடு செய்யப்படுகின்றன. தனியான கணக்குகள் பேணப்பட வேண்டுமெனக் கருதப்பெறும் செலவு விடயங்கள் மட்டும் மேலும் வகைப்படுத்தப்படுகின்றன. 

(2) ஒவ்வொரு அமைச்சரவை அமைச்சின் கீழும் தொகுமப் படுத்தப் பெற்ற தலைப்புக்கள், நிகழ்ச்சித் திட்டங்களின் நியதிகளின் படி பாராளுமன்றம் செலவினத்துக்கான ஏற்பாட்டை ஒதுக்கீடு செய்கின்றது. 

(3) மீண்டுவரும், மூலதனச் செலவினம் 

அரசாங்க செலவினமானது :-

(அ) மீண்டுவருஞ் செலவினம்

(ஆ) மூலதனச் செலவினம் ;

என வகுதிப்படுத்தப்பட்டுள்ளது. நடைமுறைச் செலவினங்கள் அனைத்தும் மீண்டுவரும் செலவினத்தின் கீழ் வகுதிபடுத்தப்பட்டுள்ளன. கொள்ளல், மறுசீரமைப்பு, சொத்துக்களின் சீராக்கம், வளங்களை அபிவிருத்தி செய்தல் போன்றவற்றுக்கான செலவினங்கள் அனைத்தும் மூலதனச் செலவினத்தின் கீழ் வகுதிப்படுத்தப்பட்டுள்ளன. இவ்வேறுபாடு வரவுசெலவுத்திட்ட வகுப்பீட்டின் ஒவ்வொரு மட்டத்திலும் பேணப்படுகின்றது. அத்துடன், ஒதுக்கீடுகள் இவ்விரு வகுதிகளின் கீழுமே செய்யப்படுகின்றன.