Teaching

Saturday, October 17, 2020

நி.ஒ 17,18 State Corporations, Grants & Subsidies

Financial Regulations 17,18 State Corporations, Grants & Subsidies


நி.ஒ. 17. அரச கூட்டுத்தாபனங்கள். State Corporations 

(1) அரச கூட்டுத்தாபனங்கள், சபைகள் மற்றும் கூட்டு அமைப்புக்களால் செயற்படுத்தப் பெறும் மூலதன கருத்திட்டங்களுக்கு வரவு செலவுத்திட்ட ஆதரவு நாடும்போது செயலாளர்கள் தேவையான நிதித் தேவையைக் குறிப்பிட வேண்டியதுடன் மீதத் தொகை ஏதுமிருந்தால் அது எவ்வாறு கண்டுகொள்ளப்படும் என்பதையும் தொடர்ந்துறும் ஆண்டுகளில் மேலும் தொகைகள் தேவைப்படுமா என்பதையும் குறிப்பிடுதல் வேண்டும். வரவு செலவுத்திட்ட ஆதரவானது குறித்த அமைச்சின் வாக்குப்பணங்களின் கீழ் புறம்பானவொரு மூலதன கருத்திட்டமாக காணப்படும். 


(2) வரவு செலவுத்திட்ட ஆதரவு நாடப்படாது இருந்தாலும் கூட அங்கீகரிக்கப்பட்ட கூட்டுத் திட்டங்களினுள் வரும் கருத்திட்டங்களின் திட்டவமைப்புக்கள் தேசிய திட்டமிடல் பணிப்பாளர் அதிபதிக்கு அனுப்பி வைக்கப்படுதல் வேண்டும். அத்துடன் அதன் பிரதி ஒன்று அரசாங்கத் தொழில் முயற்சிகள் பணிப்பாளர் அதிபதிக்கும் அனுப்பி வைக்கப்படுதல் வேண்டும். 

(3) மொத்தச் செலவு மதிப்பீடுகள் Total Estimate cost, கருத்திட்டம் முழுமையாகவோ, பகுதியாகவோ அரசாங்க வரவு செலவுத்திட்டத்தினால் நிதியளிக்கப் பெறுவது எவ்வாறு இருந்த போதிலும் முறைப்படி அங்கீகரிக்கப்பட்டு மதிப்பீடுகளில் காட்டப்படுதல் வேண்டும். 

(4) அரசாங்கத் தொழில் முயற்சிகள், அவற்றின் நடப்பு செலவுகளை உருவாக்கப்பெறும் நிதியங்களிலிருந்து ஈடு செய்யும் வகையில் தொழிற்பாட்டு மிகை ஒன்றைப் பெறுவதற்காக தமது விதிப்புகள், விலைகளை மீளாய்வு செய்தல் வேண்டும். சம்பந்தப்பட்டவொரு அரசாங்கத் தொழில் முயற்சியின் தொழிற்பாட்டுக்கு உதவிப்பணம் அளிப்பதற்கு குறித்தவொரு அரசாங்கத் தீர்மானம் இருக்குமிடத்து ஆதரவளிப்பதற்கு மட்டும் இழப்புக்கள், குறை வீழ்வுகள் ஏற்றுக்கொள்ளப்படும். 

(5) அரசாங்கத்தினால் முழுமையாக நிதியளிக்கப்பெறும் இலாப நோக்கமற்ற அரசாங்க கூட்டுத்தாபனங்களும் State Corporations அரசாங்க நிறுவனங்களும் தமது முயற்சிகளை, அக்குறித்த முயற்சிகளுக்கு அரசாங்கத்தின் முற்பட்ட அங்கீகாரம் பெறப்பட்டிருந்தாலன்றி, அதிகரிப்பதற்கு நாட்டங் கொள்ளக்கூடாது. 

நி.ஒ 18. மானியங்களும் உதவிப்பணங்களும் 


(1) அரசாங்க கட்டுப்பாடு எதுவும் கொண்டிராத அரசாங்கத்துறை சாராத அமைப்புக்களுக்கு மானியங்கள் வழங்குவதற்கான நிதி ஏற்பாடு, சில குறித்த நோக்கங்களுக்கும் விதித்துரைத்த நிபந்தனைகளுக்கு அமையவும், பாராளுமன்ற வாக்களிப்பு மூலம் வழங்கப்படுகின்றது. மதிப்பீடுகளில் காணப்படும் அத்தகைய மானியங்களுக்கான ஏற்பாட்டை பாராளுமன்றத்தின் அங்கீகாரம் இல்லாமல் மாற்ற முடியாது. 

(2) உதவிப் பணங்களுக்கான நிதி ஏற்பாடு வழங்கற் பொருளொன்றின் அல்லது சேவை ஒன்றின் உண்மையான செலவுக்கும் அத்தகைய வழங்கற் பொருள் அல்லது சேவை எந்த விலையில் விற்கப்பட வேண்டுமென அல்லது ஆற்றப்பட வேண்டுமென அரசாங்கம் பணித்தோ அந்த விலைக்கும் இடையில் உள்ள வேறுபாட்டை ஈடு செய்வதற்கு அரசாங்கத்தினால் வழங்கப்படும் கொடுப்பனவுகள் தொடர்புற்றதாய் இருக்கும்.