நிதி நடைமுறைகள் Financial Regulation 09, 10 – Order of Presentation of the General Estimates & Personal Emoluments
நிதி நடைமுறைகள் 09. பொது மதிப்பீடுகளின் முன்வைப்பு ஒழுங்கு Order of Presentation of the General Estimates
செலவின மதிப்பீடுகள், தொடருரைக் கூற்றுக்கள், பந்தியமைவு அட்டவணைகள் வழியில் பின்வரும் ஒழுங்கில் முன்வைக்கப்படுகின்றன. The Estimates of Expenditure are presented by way of narrative Statements and columnar schedules in the following order
(அ) திணைக்கள வாரியாக அமைச்சினது செலவினப் பொழிப்பு – அட்டவணை. (Ministry Summary of Expenditure by Departments – Schedule)
(ஆ) செலவினத்தலைப்பின் நோக்கங்கள், பிரதான பணிகள், பொது வேலை நிகழ்ச்சித்திட்டம் – தொடருரைக் கூற்று (Objective, Main Functions and General Work Programme of the Head of Expenditure – Narrative Statement.)
(இ) நிகழ்ச்சித்திட்டவாரியாக திணைக்களச் செலவினப் பொழிப்பு – அட்டவணை (Department Summary of Expenditure by Programme – Schedule.)
(ஈ) கருத்திட்ட வாரியாக நிகழ்ச்சித்திட்ட செலவினம் – நிதியழிப்பு பொழிப்பு அடங்கலாக அட்டவணை ஒன்று தொடரப்பெறும் தொடருரைக்கூற்று. (Programme Expenditure by Project – Narrative statement followed by a schedule including Financing Summary.)
(உ) நிகழ்ச்சித்திட்ட தொழில் வசதிப் பொழிப்பு – அட்டவணை (Programme Employment Summary – Schedule.)
(ஊ) செலவு விடய வாரியாக கருத்திட்ட செலவினம் – நிதியளிப்பு விபரங்களுடன் கூடிய அட்டவணை ஒன்று தொடரப்பெறும் தொடருரைக் கூற்று. (Project Expenditure by Object – Narrative Statement followed by a Schedule with Financing Details.)
(எ) செலவு விடய விபரங்கள் – தேவையானவிடத்து மட்டும் செலவு விடயத்தின் கீழ் வேலை விடயங்கள் – அட்டவணை (Details of Objects – Items of work under the Object where Necessary only – Schedule.)
அட்டவணை ஒவ்வொன்றிலும் வரவு செலவுத்திட்ட ஆண்டுக்கு முன்பான இரண்டு வருடங்களின் ஒப்பீட்டுத் தொகையிலக்கங்கள் காட்டப்படுகின்றன.
நிதி நடைமுறைகள் 10. ஆளுக்குரிய வேதனாதிகள்
FR. 10. Personal Emoluments
(1) ஆளுக்குரிய வேதனாதிகளுக்கான விடயம்
Financial Provisions for Personal Emoluments
அதாவது, வேதனங்கள், கூலிகள், மேலதிக நேர வேலை, விடுமுறை வேதனம், வாழ்க்கை செலவு படி, சீருடைப்படி, ஆகியவற்றுக்கும், பிற படிகளுக்குமான நிதி ஏற்பாடுகள் அங்கீகரித்த பதவியணியின் அடிப்படையில் செய்யப்படுதல் வேண்டும். எனினும், மேலதிக நேர வேலை Over time work, விடுமுறை வேதனத்துக்கான ஏற்பாடு உண்மையான தேவையின் அடிப்படையில் செய்யப்படுதல் வேண்டும். படியின் ஒவ்வொரு வகைக்கும் பொருத்தமான, நியமப்படுத்திய செலவு விடயக் குறியீட்டின் கீழ் இலக்கமும் வாசகமும் தனியாக ஏற்பாடு செய்யப்படுதல் வேண்டும்.
குறிப்பு :- பதவியினருக்கு முற்பனக் கணக்கிலிருந்து அல்லது பொது மதிப்பீடுகள் தவிர்ந்த ஏதாவது பிற மூலத்திலிருந்து கொடுக்கத்தக்க ஆளுக்குரிய வேதனாதிகள் அத்தகைய மூலத்தியிருந்தே ஈடு செய்யப்படுதல் வேண்டும்.
Note: Personal Emoluments payable to staff out of Advance Accounts or any source other then General Estimates, should be met from such source.
(2) பதவியணியை தொகுதிப்படுத்தல் Grouping of Cadre
(i) தொகுதி ‘அ’ நிலைகள் Group ‘A’ Positions
இந்த தொகுதி அரசியலமைப்பின் அல்லது ஏதாவது நியதிச்சட்டத்தின் கீழ் செய்யப்பட்ட நியமனங்கள், திணைக்களத்தலைவர்கள், பாராளுமன்றம், சனாதிபதி, முன்னாள் சனாதிபதி, அமைச்சுக்கள் போன்ற அரசியலமைப்பு சார் சபைகளுக்கான பதவி நிலைத் தர நியமனங்கள் அல்லது பாராளுமன்ற அதிகாரம் தேவையெனக் கருதப்படும் ஏதாவது பிற பதவி அடங்கலாக கொள்கை வகுத்தமைக்கும் உச்ச முகாமைத்துவ நிலைகளைக் கொண்டுள்ளது. இத்தொகுதியான பதவி ஒவ்வொன்றுக்கும் தொடர்பான தகவல்கள் அத்தொகுதியின் மொத்த நிலைகளுடன் பிரதான அட்டவணையில் காட்டப்படுதல் வேண்டும்.
(ii) தொகுதி ‘ஆ’ பதவிநிலை உத்தியோகத்தர் தரம்
Group ‘B’ – Staff Officer Grade
தொகுதி ‘அ’ வில் சேர்க்கப்படாத பதவிநிலைத்தர உத்தியோகத்தர்கள் அனைவரதும் மொத்த நிலைகளை மட்டும் மதிப்பீடுகளின் பிரதான அட்டவணையில் உள்ள விடயத்தின் கீழ் காட்டுதல் வேண்டும். தனியாக வெளியிடப்படும் விரிவான பதவியினர் அட்டவணையில் விரிவான தகவல்கள் சேர்க்கப்படுதல் வேண்டும்.
(iii) தொகுதி ‘இ’ – உபநிலை உத்தியோகத்தர் தரங்கள்
Group C – Subordinate Officer Grades
தாபன விதிக்கோவையில் வரையறை செய்யப்பட்டவாறு உபநிலை உத்தியோகத்தர் தரங்கள் யாவற்றினதும் மொத்தப் பதவியணியும் அதன் மீதான செலவினமும் இந்த அட்டவணையில் சேர்க்கப்படுதல் வேண்டும். ஏனைய விபரங்கள் புறம்பாக வெளியிடப்பெறும் விரிவான பதவியினர் அட்டவணையிற் சேர்க்கப்படுதல் வேண்டும்.
(iv) தொகுதி ‘ஈ’ – சிறு உத்தியோகத்தர் தரம்
Group D – Minor Officer Grade
சிறு தர உத்தியோகத்தரென வரையறை செய்யப்பெற்ற உத்தியோகத்தர்களின் மொத்தப் பதவியணியும் அதன் மீதான செலவினமும் இந்த அட்டவணையில் காட்டப்படுதல் வேண்டும். ஏனைய விபரங்கள் புறம்பாக வெளியிடப் பெறும் விரிவான பதவியினர் அட்டவணையில் சேர்க்கப்படுதல் வேண்டும்.
(3) பதவியினர் அட்டவணைகள்
Staff Schedules
பதவியினர்கள் யாவரும் விதித்துரைத்த அமைப்புக்குத் துல்லியமாக அமைவுறப் பகுத்துக் காட்டப்படுதல் வேண்டும். விரிவான பதவியினர் அட்டவணையானது, பொது மதிப்பீடுகளிலுள்ள நிகழ்ச்சித்திட்டத் தொழில் வாய்ப்புப் பொழிப்புக்கான ஒரு துணை வெளியீடாக தனியான ஒரு ஆவணமாக வெளியிடப்படும்.
(4) இணைந்த சேவைகள் – Combined Services
ஒவ்வொரு திணைக்களத்திலும் உள்ள இணைந்த சேவைப் பதவிகளது அங்கீகரித்த பதவியணிக்கான ஏற்பாடு அத்திணைக்களத்தின் மதிப்பீடுகளில் செய்யப்படுதல் வேண்டும். ஒவ்வொரு இணைந்த சேவைகளுக்கும் கீழான அங்கீகரித்த பதவியணியும் தொடர்புள்ள அமைச்சின் மதிப்பீடுகளில், தரங்கள், ஒவ்வொரு தரத்திலுமுள்ள அங்கீகரித்த பதவிகளின் எண்ணிக்கை, அத்தகைய சேவையின் வேதன அளவுத்திட்டம் ஆகியவற்றைச் சுட்டிக்காட்டிக் காட்டப்படுதல் வேண்டும்.
(5) முற்பணக் கணக்குகளின் கீழுள்ள பதவிகளும் பிற மூலங்களும்.
Posts under Advance Accounts and Other Sources
முற்பணக் கணக்கு முயற்சிகளில் முழுநேர அடிப்படையில் பணிக்கு அமர்த்தப்பட்டுள்ள அல்லது ஏதாவது பிற மூலங்கள் வழியில் கொடுப்பனவு செய்யப்படுகின்ற உத்தியோகத்தர்களது வேதனங்களுக்கும் கூலிகளுக்குமான நிதி ஏற்பாடு பொது மதிப்பீடுகளில் வேதனங்கள், கூலிகளின் கீழ் செய்யப்படலாகாது. ஆனால் தொடர்புள்ள முற்பணக் கணக்கு அல்லது பிற மூலத்தின் கீழ் சேர்க்கப்படுதல் வேண்டும். அத்தகைய பதவிகள் பற்றிய கூற்று ஒன்று வரைபு மதிப்பீடுகளுடன் தேசிய வரவு செலவுத்திட்டப் பணிப்பாளர் அதிபதியிடம் சமர்ப்பிக்கப்படுதல் வேண்டும்.
(6) வெறிதாகியுள்ள அல்லது புதிய பதவிகளுக்கான ஏற்பாடு.
Provision for Vacant or New Posts
வெறிதாகியுள்ள அல்லது புதிய பதவிகளுக்கான ஏற்பாடு, தொடர்புள்ள வேதன அளவுத்திட்டங்களின் தொடக்க வேதனங்களின் அடிப்படையிலும், வெற்றிடத்தை நிரப்புவதற்கான உத்தேச திகதியிலிருந்து மதிப்பீட்டு நிதியாண்டின் இறுதிவரைக்குமுள்ள காலப்பகுதிக்கு மட்டும் என்ற நிலையிலும் செய்யப்படுதல் வேண்டும்.
(7) அனுவதிக்கப்பெற்ற உத்தியோகத்தர்கள் (Seconded Officers)
ஒரு திணைக்களத்தைச் சேர்ந்த உத்தியோகத்தர் ஒருவர் இன்னொரு திணைக்களத்துக்கு அல்லது முயற்சிக்கு அனுவதிக்கப்படும் போது அல்லது கடனாக வழங்கப்படும் போது அவரது நிலையான பதவி அவரது முன்னைய திணைக்களத்தின் கீழ் தொடர்ந்து காணப்படல் வேண்டும். ஆனால், பதில் ஒழுங்குகள் தேவைப்பட்டால் அன்றி நிதி ஏற்பாடு எதுவும் சேர்க்கப்படலாகாது.
அவர் வகிக்கும் புதிய பதவியின் பெயரும் அதற்கான நிதி ஏற்பாடும், மேற்குறித்த நிதி நடைமுறைகள் 10(6)ஆம் பந்தி ஏற்புடையதாக இருந்தாலன்றி, அவர் அனுவகிக்கப்பட்ட அல்லது கடனாக வழங்கப்பட்ட திணைக்களத்தின் கீழ் காணப்படல் வேண்டும்.
(8) பதவியினரை அமர்த்துதல் Deployment of Staff
ஒரு நிகழ்ச்சித்திட்டத்தின் / கருத்திட்டத்தின் அல்லது முயற்சியின் தொழிற்பாடுகளின் தற்போதைய அளவு என்ன என்பதை விளக்க குறிப்பு காட்டுதல் வேண்டும். அத்துடன், அது வரவு செலவுத்திட்ட ஆண்டுக்கு உத்தேசிக்கப்பட்டுள்ள தொழிற்பாட்டின் அளவில் ஏதாவது அதிகரிப்பு இருந்தால் அதனைச் சுட்டிக் காட்டுவதுடன் அத்தகைய அதிகரிப்புக்கான நியாயங்களையும் சுட்டிக் காட்டுதல் வேண்டும். அதிகரிப்புகளுக்கான அத்தகைய
அதிகரிப்புகளுக்கான அத்தகைய உத்தேசங்கள் எப்போதும் நலன்களின் அதிகரிப்பு பற்றிய விபரக்குறிப்பு மூலம் அல்லது அளவிடத்தக்க வேலை அலகுகளின் நியதிகளின் படி செயலாற்றுகையில் ஏற்படும் அதிகரிப்புக்கள் பற்றிய விபரக்குறிப்பு மூலம் அல்லது பிற பொருளியலான, துல்லியமாகச் சரியான நியதிகள் மூலம் ஆதாரப்படுத்தப்படுதல் வேண்டும். இந்த விளக்கக் குறிப்பு தற்போதுள்ள ஆள் வலு முதலிய வளங்களை இனங்காண வேண்டியதுடன் ஏதாவது சாத்தியமான புறவாய்ப்புச் சீர்திருத்த வளங்களையும் குறிப்பிடுதல் வேண்டும்.
நடப்பு வருட நிகழ்ச்சித்திட்டங்கள், கருத்திட்டங்களிற் சாத்தியமாகும் முன்னுரிமை மாற்றங்கள், அரசாங்கத்திடமிருந்து பெற்ற ஏதாவது கொள்கை நெறிப்படுத்தல்கள் அடங்கலாக, அத்தகைய மாற்றத்துக்கான நியாயங்களின் ஆதரவைப் பெற்றிருத்தல் வேண்டும்.
(9) மிகைகளும் பதவியினரின் பதவி வெற்றிடங்களும். Surpluses and Vacancies of Staff
அமைச்சின் / திணைக்களத்தின் பதவியினர் அனைவரும் நிகழ்ச்சித் திட்டங்களினதும் கருத்திட்டங்களினதும் நியதிகளின் படி இனங்காணப்படுதல் வேண்டும். இவர்களை திட்டவட்டமான நிகழ்ச்சித்திட்டத்துடனும் கருத்திட்டங்களுடன் இனங்காண வேண்டியது அவசியமாகும். முன்னுரிமை குறைந்த கருத்திட்டங்களில் உள்ள எவர்களேனும் மிகையான பதவியினர் இனங்காணப்பட்டு தேவையான நடவடிக்கை எடுப்பதற்காக தேசிய வரவு செலவுத் திட்ட திணைக்களத்துக்கு அறிவிக்கப்படுதல் வேண்டும்.
(10) புதிய பதவியினருக்கான பிரேரணைகள் New Staff Proposals
(i) தற்போதுள்ள பதவியினர்க்கு சேர்ப்புக்கள் செய்வதற்கான ஏற்பாடு தேசிய வரவு செலவுத்திட்டப் பணிப்பாளர் அதிபதியின் முற்பட்ட அங்கீகாரம் இல்லாமல் (நிதி நடைமுறைகள் 71) வரைபு மதிப்பீடுகளில் சேர்க்கப்படலாகாது. இந்த அங்கீகாரத்தை நேரகாலத்தோடு நாடுவது அவசியமாகும். அவ்வாறு செய்தால்தான் தேசிய வரவு செலவுத்திட்டப் பணிப்பாளர் அதிபதி மேலதிகப் பதவியினருக்கான தேவை பற்றிய நுண்ணாய்வுகளை மேற்கொள்ளக் கூடியதாக இருக்கும்.
அத்தகைய விண்ணப்பம் ஒவ்வொன்றும், பதவிகள் நிகழ்ச்சித்திட்டங்கள், கருத்திட்டங்களின் கீழ் நடப்பு முயற்சிகள் தொடர்பிலா அல்லது புதிய முயற்சிகள் தொடர்பிலா நாடப்படுகின்றன என்பதைச் சுட்டிக் காட்டுதல் வேண்டும். முழு விபரங்களும் நிதி நடைமுறைகள் பின்னிணைப்பு 1.2 இல் விதிந்துரைத்த மாதிரிப் படிவத்தில் தரப்படுதல் வேண்டும். குறித்த நிகழ்ச்சித்திட்டங்கள், கருத்திட்டங்களுடன் இணைப்புறாத பதவியினர்க்கான வேண்டுகோள் கணிக்கப்பட மாட்டாது. கடந்து சென்ற ஒரு நிதி ஆண்டில் ஒரு திகதிக்குப் பின் நோக்கித் தழுவும் வகையில் எதுவும் உருவாக்கப்படமாட்டாது.
(ii) புதிய முயற்சிகளுக்கு மேலதிகப் பதவியினர் நாடப்பட்டால் அதற்கான விளக்கம் தரப்படுதல் வேண்டும். மதிப்பீட்டு பிரேரணைகள் தேவைகளை வெறுமனே எடுத்துரைப்பனவாக அமையக்கூடாது. நிகழ்ச்சிமுறை கருத்திட்ட அமைப்பானது நடைபெறும் நிகழ்ச்சித்திட்டங்கள், கருத்திட்டங்களை மதிப்பீடு செய்வதற்கும் ஒரு கருத்திட்டத்தை இன்னொன்றுடன் சமநிலைப் படுத்துவதோடு மேற்கொண்டு செய்யப்படும் முதலீட்டின் நலன்களை துல்லியமாக அல்லது அளக்கத்தகு நியதிகளில் இனங்காண்பதற்கும் சந்தர்ப்பத்தை ஏற்படுத்துகிறது.
செயலாளர் / திணைக்களத் தலைவர் தற்போதுள்ள கருத்திட்டங்களிடையேயான முன்னுரிமைகளைத் தனது தேவைகளை ஈடு செய்யும் வகையில் மீளாய்வு செய்வது சாத்தியமானது. அப்போதுதான் அவர் ஒரு கருத்திட்டத்தின் கீழான முயற்சிகளை உயர்த்த வேண்டியிருந்தால் அவர் தற்போதுள்ள வளங்கள் ஒதுக்கீடுகளுடன் குறைந்த முன்னுரிமையுள்ள பிற கருத்திட்டங்களைக் குறைப்பதன் மூலம் அதனைச் சாதிக்க முடியும்.
(iii) புதிய பதவியினருக்கான ஏதாவது பிரேரணைகள் தற்போதுள்ள பதவியினர் எவ்வாறு பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர் என்பதையும் அவர்களின் நேரத்தின் எந்தச் சதவீதம் பல்வேறு கருத்திட்ட முயற்சிகளில் செலவிடப்படுகின்றது என்பதையும் சுட்டிக் காட்டுதல் வேண்டும். புதிய பதவியினர்க்கான பிரேரணைகள் இத்தகவல்களையும் வழங்குதல் வேண்டும். அப்போதுதான் முயற்சிகளின் அளவில் ஏற்படும் ஏதாவது அதிகரிப்பை தற்போதுள்ள பதவியினர் சமாளிக்க என்பதை தேசிய வரவு செலவுத்திட்டத் திணைக்களத்தில் நுனித்தாய்வு சாத்தியமாக இருக்கும்.
முயற்சி மட்டம் அதிகரித்துள்ளது என்ற நியாயத்தின் பேரில் புதிய பதவியினர்க்கான வேண்டுகோள்களை விடுப்பதற்கு முன்னர் கருத்திட்டம் ஒன்றின் கீழுள்ள தற்போதைய ஆள்வலுவும் ஏனைய வளங்களும் முழுமையாகப் பயன் படுத்தப்படுகின்றனவா என்பதை நுனித்தாய்வு செய்வதற்கு திணைக்களத்தலைவரும் செயலாளரும் பெருமுயற்சி எடுத்தல் வேண்டும். ஆதலின் பதவியணியிலோ, நிதி ஏற்பாட்டிலோ சேர்ப்புக்கள் அல்லது வேறுபடுத்தல்கள் எவையும் வெறும் தற்செயல் நிகழ்ச்சியாகப் பிரேரிக்கப்படலாகாது.
அளவிடத்தக்க விளைவுடன் கூடிய திட்டவட்டமான நிகழ்ச்சித்திட்டத்தின் குறித்த தொடர்பில் செய்யப்பட வேண்டும் என்பதை கவனத்தில் கொள்ளுதல் வேண்டும். அதே குறிக்கோள்களை அடையப் பெறுவதற்கு மிக பயனுறுதி வாய்ந்த சிக்கன முறைகளின் மாற்றீடுகள் பரிசீலனை செய்யப்படுதல் வேண்டும். அத்தகைய நுண்ணாய்வுகளின் விபரங்கள், மாற்று முறைகளின் தெரிவு தொடர்பில் நெறிமுறையைப் பெறுவதற்காக செயலாளருக்கு அறிவிக்கப்படுதல் வேண்டும்.
குறைந்த முன்னுரிமையுள்ள ஒரு நிகழ்ச்சித்திட்டத்திலிருந்து அல்லது ஒரு கருத்திட்டத்திலிருந்து வளங்களை இன்னொரு உயர் முன்னுரிமை பெற்ற நிகழ்ச்சித் திட்டத்துக்கு அல்லது கருத்திட்டத்துக்குப் பயன்படுத்தப்படும் சாத்தியக்கூறு நுனித்தாய்வு செய்யப்பட்டு தேசிய வரவு செலவுத்திட்ட பணிப்பாளர் அதிபதிக்கு அறிவிக்கப் படுதல் வேண்டும். ஒருவகை வளத்தின் ஏதாவது அதிகரிப்பு நிகழ்ச்சித்திட்டம் ஒன்றுக்கு அல்லது கருத்திட்டம் ஒன்றுக்கு கிடைக்கத் தக்கனவாக உள்ள பிற வளங்கள் மீதும் ஏற்படுத்தக் கூடிய தாக்கம் பற்றிய தெளிவான தெரிநிலை ஒன்று இருத்தல் வேண்டும். உ+ம் : சோதனைகாரர் பதவியணியில் ஏற்படும் அதிகரிப்பு ஒன்று பிரயாணம் போன்றவற்றில் ஏற்படும் செலவினத்தில் அதிகரிப்பை அவசியம் ஏற்படுத்தும்.
(iv) நிகழ்ச்சித்திட்டம் ஒன்றுக்கு உட்பட்ட மூலதன கருத்திட்டங்கள் அந்நிகழ்ச்சித் திட்டத்துக்கு மேலதிகத் திறனை வழங்குகின்றன. அத்துடன் அத்தகைய திறன் தானாகவே அதிகரிப்பது ஆள்வலு, பொருள்கள், மற்றும் வழங்கள் மீது மேலதிக மீண்டுவருஞ் செலவினத்தைத் தேவைப்படுத்தக் கூடும். பதவியணி அதிகரிப்பு, நிதி ஏற்பாடு வழியில் நாடப்படும் ஏதாவது மேலதிக வளங்கள் தனித்தனியாக இனங்காணப்பட்டு மேலதிக முயற்சிகள் விளைவு மீது எதிர்பார்த்த அதிகரிப்பு நலன்கள் போன்றவை தொடர்பில் நியாயப்படுத்தப்படுதல் வேண்டும்.
நிதி நடைமுறைகள்