Teaching

Wednesday, October 14, 2020

நி.ஒ 15,16 Advance Accounts & Other Level Government

Financial Regulation 15, 16 Advance Accounts and Other Level Government 


நி.ஒ 15 முற்பணக்கணக்கு முயற்சிகள் Advance Accounts Activities

(1) வகுதிகள் Categories

முற்பணக்கணக்குகள் தொடர்புற்ற மதிப்பீடுகள் நான்குவகை எல்லைகளை காட்டுகின்றன. அவை பின்வருமாறு: 

(அ) செலவினத்தின் உச்ச எல்லை Maximum limit of Expenditure
(ஆ) கணக்குகளில் வரவு வைத்த பெறுகைகளது குறைந்த எல்லை Minimum limit of Receipts credited to the Accounts
(இ) பற்று மீதங்களின் உச்ச எல்லை Maximum limit of Debit Balances
(ஈ) பொறுப்புக்களது உச்ச எல்லை Maximum limit of Liabilities

(2) முற்பணக் கணக்கு முயற்சிகளின் மூலதனச்செலவினம் இவ்வெல்லைகளில் அடக்கப்படவில்லை. அத்தகைய செலவினம் பொது மதிப்பீடுகளில் பொருத்தமான நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ், கருத்திட்டத்தின் கீழ் ஏற்பாடு செய்யப்படுகிறது. எனினும் தேய்மான ஏற்பாடு செய்யப்பெற்ற சொத்துக்கான பதிலீடு தேய்மான ஒதுக்கீட்டு நிதியத்திலிருந்து ஈடு செய்யப்படும். பதிலீட்டு செலவானது மேலதிகமாக மதிப்பீடுகளில் மூலதன கருத்திட்டத்தின் கீழ் காட்டப்படும். ஆனால் நிதி ஏற்பாடு எதுவும் காணப்படமாட்டாது. அத்தகைய பதிலீட்டு செலவு, செலவினம் செய்யப்பெறும் ஒதுக்கீட்டைச் சுட்டிக்காட்டும் அடிக்குறிப்பு மூலம் காட்டப்படுதல் வேண்டும்.

(3) தொழிலாளரின், பொருள்களின் நேரடி உபயோகம், நேரடிச்செலவுகள், அவற்றுடன் நிருவாகச் செலவுகள், பிற செலவுகள் மீதான தொழிற்பாட்டு அளவு பற்றிய போதுமான விளக்கக் குறிப்புக்கள் சமர்ப்பிக்கப்படுதல் வேண்டும். முயற்சிகளின் அளவை அதிகரிப்பதற்கான தேவை ஏதாவது அரசாங்கக் கொள்கைப் பணிப்புரைகளின் தொடர்புடன் முழுமையாக விளக்கப்படுதல் வேண்டும். 

செயலாற்றுகை இலக்குகள் சுட்டிக்காட்டப்படுதல் வேண்டும். பதவியினரில் ஓர் எண்ணிக்கையினர் பயன்படுத்தப்பட்டால் அது குறைக்கப்பட வேண்டுமா அல்லது பதவியினரின் எண்ணிக்கை கூட்டப்பட வேண்டுமானால் செயலாற்றுகையில் அதிகரிப்பு ஏதாவது திட்டமிடப்பட்டுள்ளதா என்பது குறிப்பிடப்படுதல் வேண்டும். எல்லைகளை மீளாய்வு செய்வதற்கான தேவை மீதான அறிவு முறை சார்ந்த பகுப்பாய்வு எதனையாவது செய்ய வேண்டியிருந்தால் அதனைச் செய்ய உதவும் வகையில் விதித்துரைத்த படிவங்களிற் காணப்படும் வினாக்கள் யாவற்றுக்கும் போதியளவில் விடை அளிக்கப்படுதல் வேண்டும். 

(4) முற்பணக்கணக்கு முயற்சி ஒவ்வொன்றும் பின்வரும் வகைகளில் ஒன்றினுள் வருவதுடன் செலவினத் தலைப்புக்களின் கீழ் தொகுமப்படுத்தவும் படும். அடையாளம் காணும் நோக்கங்களுக்கான குறியீடிடல் ஐந்து இலக்கங்களுடன் செய்யப்படும். இதில் மூன்று இலக்கங்கள் தலைப்பின் இலக்கமாக இருக்கும். உதாரணமாக, 

தலைப்பு இல 481 இன் கீழான முற்பணக்கணக்கு – 48101, 48102,48103 போன்றவை  

(5) முற்பணக்கணக்கு வகைகள் Types of Advance Account

(i) உற்பத்தி முற்பணக்கணக்கு Production Advance Accounts(ii) அபிவிருத்தி முற்பணக்கணக்கு Development Advance Accounts(iii) வியாபார முற்பணக்கணக்கு Trading Advance Accounts(iv) களஞ்சியப் பொருள் முற்பணக்கணக்கு  Stores Advance Accounts(v) அரசாங்க கூட்டுத்தாபனங்களுக்கான முற்பணங்கள் Advances to Public Corporations(vi) அரச உத்தியோகத்தர்களுக்கான முற்பணங்கள் Advance to Public Officers(vii) நானாவித முற்பணக்கணக்குகள் Miscellaneous Advance Accounts 

(6) எதிர்பார்த்த இழப்புக்களுக்கான ஏற்பாடு

முற்பணக்கணக்கு முயற்சி ஒன்றின் தொழிற்பாட்டில் நிதி ஆண்டின் போது தேறிய இழப்பு ஒன்று எதிர்பார்க்கப்பட்டு அத்தகைய இழப்பு ஏற்படுவது தொடர்புள்ள அதிகார பீடத்தினால் அங்கீகரிக்கப்பட்டால் மதிப்பிட்ட தேறிய இழப்புக்கான ஏற்பாடு ஆண்டு மதிப்பீடுகளின் பொருத்தமான நியமப்படுத்திய செலவு விடயக்குறியீட்டில் காணப்படும் ஒரு விடயத்தின் கீழ் சேர்க்கப்படுதல் வேண்டும். 

(7) முன்னைய ஆண்டில் ஏற்பட்ட இழப்புக்கள் – Losses in previous financial year 

இவ்விடயங்களிற் பின்பற்ற வேண்டிய நடைமுறை அத்தியாயம் VIII, முற்பணக்கணக்கு – நி.ஒ. 513 இல் தரப்பட்டுள்ளது. 

நி.ஒ 16. அரசாங்கத்தின் ஏனைய மட்டங்கள் Other Level of Government. 

(1) அரசாங்கத்தின் ஏனைய மட்டங்களுக்கான ஏதாவது ஏற்பாடு மானியங்கள் அல்லது உதவு தொகைகள் என்ற முறையில் தேசிய வரவு செலவுத்திட்டத்தில் ஏற்பாடு செய்யப்படும். மாகாண சபைகளுக்கான ஏற்பாடு விடயத்தில் விதித்துரைத்த அமைப்பு பின்பற்றப்படுதல் வேண்டும். மாகாண சபைகள் பொருட்டு தேசிய வரவு செலவுத்திட்டத்தில் செய்யப்படும் நிதி ஏற்பாடுகள் மாகாண சபைகளுக்குப் பொறுப்பாகவுள்ள வரிசை அமைச்சின் கீழ் செய்யப்படுகின்றது. அந்தப் பிரதான செயலாளர்களுடனும் நிதி ஆணைக்குழுவுடனும் உசாவுதல் செய்து வரவு செலவுத்திட்ட யோசனைகளை வகுத்தமைக்கும் பொறுப்பு அந்த அமைச்சின் செயலாளரைச் சார்ந்ததாகும். 

(2) மாகாண சபைகள் செயற்படுத்தவுள்ள பரவலாக்கிய பணிகள் தொடர்பில் அரசாங்கத்தின் பொது முதலீட்டு நிகழ்ச்சித் திட்டத்தில் சேர்க்கப்பெறும் கருத்திட்டங்கள் அனைத்துக்குமான வரைவு மதிப்பீட்டு யோசனைகள் தொடர்புள்ள அமைச்சின் அல்லது திணைக்களத்தின் செலவினத் தலைப்பின் கீழ் சேர்க்கப்படுதல் வேண்டும். இந்த யோசனைகள் அந்தந்த மாகாண சபைகளுடன் உசாவுதல் செய்து தயாரிக்கப்படுதல் வேண்டும். 

இம்மதிப்பீடுகளை தயாரிப்பது பற்றிய அறிவுறுத்துரைகள் தொடர்புள்ள செயலாளரால் அந்தந்தப் பிரதான செயலாளர்களுக்கு அனுப்பி வைக்கப்படுதல் வேண்டும். 

(3) மாகாண சபைகளுக்கு விடுவிக்கப்பட்ட அல்லது விடுவிப்பதற்குக் குறிப்பீடு செய்யப்பட்ட பதவியினருக்கு அமைச்சுக்களின் அல்லது திணைக்களங்களின் மதிப்பீடுகளில் நிதி ஏற்பாடு எதுவும் சேர்க்கப்படலாகாது. அத்தகைய பதவியினருக்கான தேவைகள் மாகாண சபைகளுக்கான மொத்த மானியங்களின் கீழ் ஏற்பாடு செய்யப்படும். எனினும் இந்த வகுதியும் மாகாண நிருவாகத்தில் சம்பந்தப்படும் பதவியினரது எண்ணிக்கையும் தெளிவாக இனங்காணப்பட்டு பொருத்தமான நிகழ்ச்சித்திட்ட பதவியினர் அட்டவணையிற் காட்டப்படுதல் வேண்டும்.