வடக்கு மாகாண பொதுச்சேவையின் கல்வி அமைச்சின் கீழ்வரும் முகாமை உதவியாளர் தொழில்நுட்பம் சாராத மேற்பார்வை சேவை ஊழியர் III, II, I இல் உள்ளவர்களுக்கான வினைத்திறமைகாண் தடைப்பரீட்சை 2019 (II) 2023
வடக்கு மாகாண பொதுச்சேவையின் கல்வி அமைச்சின் கீழ்வரும் முகாமை உதவியாளர் தொழில்நுட்பம் சாராத பிரிவு 2 மேற்பார்வை சேவை ஊழியர் சேவைப்பிரமாணக் குறிப்பிற்கு அமைவாக, குறித்த சேவையின் தரம் III, தரம் II, மற்றும் தரம் 1 ஆகியவற்றைச் சேர்ந்த கீழ்ச்குறிப்பிடப்படும் பதவியில் உள்ள அலுவலர்களுக்கான வினைத்திறமைகாண் தடைப்பரீட்சைகள் செயலாளர், மாகாண பொதுச்சேவை ஆணைக்குழு, வடக்கு மாகாணம் அவர்களினால் 2023ஆம் ஆண்டு நடாத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பதவிப் பெயர்
1. ஆய்வுகூட உதவியாளர் (Lab Assistant)
2. மேற்பார்வையாளர் (Warden)
3. உதவி மேற்பார்வையாளர் (Sub Warden)
விண்ணப்ப படிவம்
பரீட்சார்த்திகள், இச்சுற்றறிக்கையுடன் இணைக்கப்பட்டுள்ள விண்ணப்பப்படிவத்தினை தமது சொந்தக் கையெழுத்து மூலம் பூர்த்தி செய்து தமது திணைக்களத் தலைவர் ஊடாக "செயலாளர், மாகாண பொதுச்சேவை ஆணைக்குழு, வடக்கு மாகாணம், இல: 393/48, கோவில் வீதி, நல்லூர், யாழ்ப்பாணம்." எனும் முகவரிக்குப் பதிவுத் தபாலிலோ / கைமூலமான தபால் முறையிலோ அனுப்பி வைத்தல் வேண்டும் என்பதுடன் விண்ணப்பத்தின் நிழற்படப் பிரதியை தம்வசம் வைத்துக்கொள்ளுதல் பயனுள்ளதாகும்.