Supervisory Management Assistant of the Department of Posts
இலங்கை அஞ்சல் திணைக்களத்தின் கண்காணிப்பு முகாமைத்துவ உதவியாளர் - தொழில்நுட்பம் அல்லாத/ தொழில்நுட்ப பதவித் தொகுதியின் III ஆந் தரத்தின் அஞ்சல் சேவை அலுவலர் பதவிக்கு ஆட்சேர்ப்புச் செய்வதற்கான திறந்த போட்டிப் பரீட்சை - 2025 இற்கான விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது.
இலங்கை அஞ்சல் திணைக்களம் கண்காணிப்பு முகாமைத்துவ உதவியாளர் – தொழில்நுட்பம் அல்லாத / தொழில்நுட்ப பதவித் தொகுதியின் III ஆந் தர அஞ்சல் சேவை அலுவலர் பதவிக்கு ஆட்சேர்ப்பு செய்வதற்கான திறந்த போட்டிப் பரீட்சை 2025 ஆம் வருடத்தில் ஒற்றோபர் மாதம் நடாத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை அஞ்சல் திணைக்களத்தினால் கண்காணிப்பு முகாமைத்துவ உதவியாளர் - தொழில்நுட்பம் அல்லாத/ தொழில்நுட்ப பதவித் தொகுதியின் III ஆந் தர அஞ்சல் சேவை அலுவலர் பதவியில் நிலவும் 600 வெற்றிடங்களுக்காக தகுதியுள்ள விண்ணப்பதாரர்களிடமிருந்து மாவட்ட ரீதியில் ஆட்சேர்ப்பு செய்வதற்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.
இலங்கை பரீட்சைகள் திணைக்களத்தின் www.doenets.lk இணையத்தளத்தில் “Our services" இன் கீழ் காணப்படுகின்ற “Online Applications - Recruitment Exams/E.B. Exams" ஊடாக வெளியிடப்பட்டுள்ளது என்பதுடன் விண்ணப்பங்களை நிகழ்நிலை (Online) ஊடாக மாத்திரமே விண்ணப்பிக்க முடியும்.
நிகழ்நிலை விண்ணப்பங்களானது 2025, யூலை மாதம் 28 ஆம் திகதி மு.ப. 9.00 மணிக்கு ஆரம்பிக்கப்படும் என்பதுடன் 2025, ஓகத்து மாதம் 15 ஆம் திகதி இரவு 9.00 மணிக்கு முடிவுறுத்தப்படவுள்ளது. தற்போது அரச / மாகாண அரச சேவையில் கடமையாற்றும் உத்தியோகத்தர்கள் விண்ணப்பங்களின் பிரதியொன்றை தமது சுயவிபரக் கோவையில் உள்ளிடுவதற்காக நிறுவனத் தலைவருக்கு கையளிக்க வேண்டும் என்பதுடன்,
நேர்முகப் பரீட்சைக்கு அழைக்கப்படுகின்ற சந்தர்ப்பத்தில் நிறுவனத் தலைவரினால் உறுதிப்படுத்தப்பட்ட விண்ணப்பத்தின் பிரதி மற்றும் சேவையை உறுதிப்படுத்தும் கடிதம் ஆகியவற்றை சமர்ப்பித்தல் வேண்டும். எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.