Teaching

Tuesday, August 20, 2024

அரசாங்க ஊழியர்களின் சம்பள அதிகரிப்பானது திட்டமிடப்பட்ட வகையில் 55000 ரூபாவாக

அரசாங்க ஊழியர்களின் சம்பள அதிகரிப்பானது திட்டமிடப்பட்ட வகையில் 55000 ரூபாவாக அல்லது அதற்கும் மேலாக அதிகரிக்கப்படும் எனவும் அதில் எந்தவொரு மாற்றங்களும் இல்லை எனவும் போக்குவரத்து நெடுஞ்சாலைகள் மற்றும் வெகுஜன ஊடகத்துறை அமைச்சரும்,  அமைச்சரவை பேச்சாளருமான பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். 



அண்மையில் அமைச்சரவை கூடியபோது அரச ஊழியர்களின் சம்பள அதிகரிப்பு தொடர்பான அமைச்சரவை பத்திரத்தை சமர்ப்பித்ததாகவும் அதில் முக்கிய இரண்டு விடயங்கள் உள்ளடக்கப்பட்டதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.


இதற்கமைய அனைத்து அரச ஊழியர்களுக்கும் மூன்றாண்டுகளுக்கு மாற்றமின்றி ரூபா25000 கொடுப்பனவு வழங்குவதுடன் அடிப்படை சம்பளம் திருத்தப்படா விட்டால் 24%  தொடக்கம் 25% வரை அதிகரிக்கும் என்பதுடன், அரச சேவையில் உள்ள ஆரம்ப தர ஊழியர்களுக்கு ரூபா 55000 அல்லது அதற்கு மேல் அதிகரிக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.