சமுர்த்தி அபிவிருத்தி அதிகாரசபையில் இணைக்கப்பட்டு சேவையாற்றி விலகிய ஊழியர்களுக்கு மீண்டும் சமுர்த்தி அபிவிருத்தித் திணைக்களத்தில் சேர்த்துக் கொள்வதற்காக வாய்ப்பு வழங்கப்படவுள்ளது.
2013 ஆம் ஆண்டின் 01ஆம் இலக்க வாழ்வின் எழுச்சி சட்டத்தின் மூலம் வாழ்வின் எழுச்சி அபிவிருத்தித் திணைக்களத்தைத் தாபிக்கும் போது, முன்னாள் சமுர்த்தி அபிவிருத்தி அதிகாரசபைக்கு இணைப்புச் செய்யப்பட்டு சேவையாற்றிய ஊழியர்களுக்கு குறித்த சட்டத்தின் ஏற்பாடுகளுக்கமைய, தமது சுயவிருப்பின் பேரில் ஓய்வூதியத்துடன் கூடிய அப்போதிருந்த வாழ்வின் எழுச்சி அபிவிருத்தித் திணைக்களத்திற்கு சேர்க்கப்படுவதற்கு பல சந்தர்ப்பங்களில் வாய்ப்புக்கள் வழங்கப்பட்டிருந்தது.
ஆனாலும், பல்வேறு காரணங்களால் தமது விருப்பை மாற்றிக் கொள்ள முடியாது போன 3,000 ஊழியர்கள் இருக்கின்றமை அடையாளங் காணப்பட்டுள்ளனர். அதற்கிணங்க, காணப்படுகின்ற சட்ட வரையறையில், அரச சேவைகள் ஆணைக்குழுவிடம் ஆலோசனை கேட்டறிந்து வாழ்வின் எழுச்சி அபிவிருத்தித் திணைக்களத்திற்கு சேர்த்துக் கொள்வதற்கு கடந்த 2021.08.26ம் திகதி அமைச்சரவை உடன்பாடு தெரிவித்துள்ளது.