அரசாங்க உத்தியோகத்தர்களுக்கு 2024 வரவுசெலவுத் திட்ட முன்மொழிவுகளுக்கு இணங்க அதிகரிக்கப்பட்ட வாழ்க்கைச் செலவுப்படியான ரூ. 10,000/- வழங்குவதற்கான சுற்றுநிருபம் வெளியிடப்பட்டுள்ளது.
இதன்படி 2024 ஜனவரி மாதம் முதல் மார்ச் மாதம் வரையில் வாழ்க்கைச் செலவுப்படியைச் செலுத்தும் போது தற்போது மாதமொன்றுக்கு செலுத்தப்படும் ரூ. 7,800/- வாழ்க்கைச் செலவுப்படியுடன் 2024 வரவுசெலவுத் திட்ட முன்மொழிவுகளுக்கு இணங்க அதிகரிக்கப்பட்ட வாழ்க்கைச் செலவுப்படியான ரூ. 10,000/- வாழ்க்கைச் செலவுப்படியில் 50% ஆன ரூ. 5,000/- ஐச் சேர்த்து ரூ. 12,800/- ஐச் செலுத்துதல். மற்றும்
2024 ஏப்ரல் மாதம் முதல் மாதாந்த வாழ்க்கைச் செலவுப்படியைச் செலுத்தும் போது, ரூ. 12,800/- வாழ்க்கைச் செலவுப்படியுடன் 2024 வரவுசெலவுத் திட்ட முன்மொழிவுகளுக்கு இணங்க அதிகரிக்கப்பட்ட ரூ. 10,000/- இன் மீதமுள்ள 50% ஆன ரூ. 5,000/- ஐச் சேர்த்து ரூ. 17,800/- செலுத்துதல். வேண்டும் என சுற்றுநிருபத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.